தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும்குரூப்-2 பணிகளுக்கு நேர்முகத் தேர்வை நீக்க அரசு முடிவு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 பணிகளுக்கு நேர்முகத் தேர்வை நீக்க அரசு முடிவு தமிழகத்தில் அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் ஊழியர்களும், அலுவலர்களும் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்காக குரூப்-1, குரூப்-2 குரூப்-2-ஏ, குரூப்-4 என பல்வேறு நிலை களில் போட்டித் தேர்வுகள் நடத்தப் படுகின்றன. குரூப்-4 பணிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. ஆனால், குரூப்-1, குரூப்-2 நிலையிலான பணிகளுக்கு எழுத்துத் தேர்வுடன், நேர்முகத் தேர்வும் நடைபெறும். நேர்முகத் தேர்வு கொண்ட குரூப்-2 தேர்வின்கீழ் நகராட்சி ஆணையர், துணை வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர், சிறைத் துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ), உள் ளாட்சி தணிக்கை உதவி ஆய்வா ளர், கூட்டுறவு சங்கங்களின் முது நிலைஆய்வாளர்,கைத்தறிஆய்வா ளர், வருவாய் உதவியாளர், பேரூ ராட்சி செயல் அலுவலர் உட்பட பல்வேறு பதவிகள் வருகின்றன. அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர், நேர்முக எழுத்தர் போன்ற பணியிடங்கள் குரூப்-2-ஏ தேர்வு மூலமாக ந...