TNPSC UNIT -8 தமிழ்நாடு மின்ஆளுகை

பிற டிஜிட்டல் முன்முயற்சிகள்

ஹிமாத் செயலி (Himmat)

 * இது பெண்களுக்கான டெல்லி காவல்துறையின் முன்முயற்சி,

* இது ஒரு அவரகால சேவையை வழங்கும் ஆன்ட்ராய்டு செயலியாகும். டெல்லி காவல்துறை அதிகாரிகளுக்கு மற்றும் ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது குழுக்களுக்கு அவசர அழைப்பு அல்லது அவசர செய்தியை அனுப்பலாம்.

அவசர உதவியை நாடியவரின் இருக்கும் இடம் சார்ந்த தகவல்களை குறுந்தகவல் வழியாகவும் இத்தளத்தின் வழியாகவும் காவல்துறை பணியாளர்களுக்கு வந்தடையும்.

மேக்ராஜ்

* மேகக் கணினியின் நன்மைகளை பயன்படுத்துவதற்கு இந்திய அரசு ஒரு லட்சிய முயற்சியாக "மேக்ராஜ்" திட்டத்தை கொண்டு வந்துள்ளது. * நாட்டில் மின் ஆளுமையின் சேவை வழங்கலை துரிதப்படுத்துதல்.

* உள்கட்டமைப்பின் பயன்பாட்டை உறுதிசெய்து வளர்ச்சியை துரிதப்படுத்துதல்.

 டிஜிலாக்கர்

* மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் (Mcity) “டிஜிட்டல் இந்தியா" திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட முதன்மை முயற்சியாகும். * நோக்கம்: ஆவணங்கள் அனைத்தையும் மின்னணு முறையில் மாற்றி எளிதாக சரிபார்க்கவும், அச்சிடக்கூடிய வடிவத்தில் சேமிக்கவும் உதவுகிறது.

* பயனாளிகள் தங்கள் காப்பீடு, மருத்துவ அறிக்கைகள், பான்கார்டு, கடவுச்சீட்டு, திருமணச் சான்றிதழ்கள், பள்ளிச் சான்றிதழ்கள் மற்றும் இதர ஆவணங்களை மின்னணு வடிவில்சேமிக்கலாம்.

• இந்த லாக்கரை அந்தந்த நபர்கள் தங்களது மொபைல் எண்ணைப் பயன்படுத்தி அனுகலாம்.

• மின்னணு ஆவணங்களை சேகரிப்பதை தவிர்த்து அரசின் மின்னணு ஆவணங்கள் சேமிக்கப்பட்ட இடங்களின் இணைதள முகவரியையும் (URL) சேமிக்க உதவுகிறது.

பீம்செயலி

இது இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தால் (NPCT) உருவாக்கப்பட்டது. டிசம்பர்2016-ல் தொடங்கப்பட்டது.

இது நிகழ்நேர பணப்பறிமாற்றத்தை அனுமதிக்கும் ஒரு ஒருங்கிணைந்த கட்டண இடைமுக தளமாக (UPI) விளங்குகிறது.

* மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Meity) ஆனது பீம் 2.0 என்ற புதிய பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

* தற்போது நடப்பில் இருக்கும் 13 மொழிகளுடன் கூடுதலாக கொங்கணி, போஜ்புரி, ஹரியானா ஆகிய மூன்று புதிய மொழிகளை அறிமுகம் செய்துள்ளோம். * பீம் 2.0வில் தற்போதைய பண பரிவர்த்தனைக்கான உச்ச வரம்பை 20,000ல் இருந்து 1,00,000 ஆக சரிபார்க்கப்பட்ட வணிகர்களுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

• பிற ங்களான நன்கொடை வழிதடம், பல வங்கி கணக்குகளை இணைக்க வசதி ஆரம்ப பொது சலுகை (IPO), பணத்த பரிசளித்தல் போன்றவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆதார் இயக்கப்பட்ட கட்டண முறை

தமிழ்நாட்டில் மீன்ஆளுமை
இது வங்கி நடைமுறைப்படுத்தும் மாதிரியாகும். இது இணைய வழியாக இயங்ககூடிய உள்ளடக்கி நீதி சேர்க்கை பரிவர்த்தனையை மைக்ரோ ஏடிஎம்களில் அங்கீகரிக்கப்பட்ட ஆதார் வழிதடத்தைக் கொண்டு மேற்கொள்ளப்படும்.

அரசாங்க மின்-சந்தை (GeM)

* இது வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் தேசிய கலைநயமிக்க பொதுகொள் முதல் வழிதடம். * இது தொழிற்நுட்பத்தை கொண்டு அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களுக்கு நுழைவு நிலை

தடைகளை நீக்கவும் மேலும் இது பரந்த அளவிலான பொருட்கள் மற்றும் சேவைகளை கொண்டு.ஒரு துடிப்பான மின் சந்தையை உருவாக்கி உள்ளது.

மேலும் இது பொது கொள்முதலை வெளிப்படையாகவும் திறன்படவும் விரைவாகவும் மேற்கொள்ளஉதவுகிறது.

கோயா போயா தளம்

இது குடிமக்களை அடிப்படையாகக் கொண்ட இணையதளம். இதன் மூலம் காணாமல் போன மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகளை பற்றிய தகவல்களை அறியலாம். இதை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டது. இந்த இணையதளம் குடிமக்களுக்கு காணாமல் போன குழந்தைகளை பற்றிய புகார் அளிக்க ஒரு வழிதடமாக செயல்படுகிறது.

* கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகளை பற்றிய தகவல்களையும் இவ்விணையதளத்தில் பதிவு.செய்யலாம்.

• இதன் மூலம் புகார்களை எழுத்து, புகைப்படம், காணொலி மற்றும் பிற வடிவங்களில் பதிவேற்றம் செய்யலாம்.

நாரி (NARI)

* இது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட இணைய தளமாகும். இது பெண்களின் வாழ்க்கையை பாதிக்கும் பிரச்சனைகள் குறித்த தகவல்களை வழங்குகிறது.

• பெண்களுக்கான அரசாங்க திட்டங்கள் மற்றும் பெண்களுக்கான முன்முயற்சிகள் பற்றிய தகவல்களை எளிதாக அணுகக்கூடிய வகையில் இந்த தளம் அமைத்துத்தர முயல்கிறது. .ஷாலா சித்தி (Shalaa Siddhi)

• பள்ளி தரநிலைகள் மற்றும் மதிப்பிடு குறித்த தேசிய திட்டமே (NPSSE) “ஷாலா சித்தீயின் நோக்கமாகும். பள்ளிகளின் மேம்பாட்டை மதிப்பீடு செய்வதற்கான விரிவான கருவியாகும்.
இதை தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாக பல்கலைக் கழகத்தால் (NVEPA) உருவாக்கப்பட்டது. * பள்ளிகளின் செயல்திறனை மூலோபாய முறையில் மதிப்பீடு செய்வதற்கும் முன்னேற்றத்திற்கான

தொழில்முறை தீர்ப்புகளை வழங்குவதற்கும் இது உதவுகிறது. -பஞ்சாயத்து கிராம் பஞ்சாயத்து செயல்பாடுகளை இயந்திரமயமாக்குவதற்கான விரிவான' மென்பொருள் தீர்வை வழங்குதல். -மாட்டம்: மாவட்ட அளவில் பல்வேறு துறைகளின் செயல்திறனை மேம்படுத்துவதையும் குடிமக்களுக்கு தடையற்ற சேவையை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டது. இதன்மூலம் அவர்களது அனுபவத்தை மேம்படுத்துவற்கு உதவுகிறது.

. -umologyr (e-Basta)

இது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முயற்சியாகும்.

நோக்கம்: பள்ளிப் புத்தகங்களை மின்னணு முறையில் பயன்படுத்த மின் புத்தகங்களாக டிஜிட்டல் வடிவத்தில் அணுகச் செய்தல். இதன் மூலம் புத்தகங்களை டேப்லட்டும், மடிக்கணிகளிலும் வாசிக்க மற்றும் பயன்படுத்த ஏதுவகை செய்யப்பட்டுள்ளது.

நிக்சய் (NIKSHAY)

தேசிய தகவல் மையத்தால் (NIC) உருவாக்கப்பட்டது. இது மாற்றியமைக்கப்பட்ட தேசிய காசநோய் திட்டத்தை (RNTCP) திறம்பட
கண்காணிக்கிறத பல்வேறு தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை பயன்படுத்தி காசநோயை கட்டுபடுத்தும்அம்சங்களை NIKSHAY உள்ளடக்கியது.

இ-பாடசாலை

 இது NCERTஆல் உருவாக்கப்பட்டது.

 நோக்கம்: மின்னணு வேறுபாட்டை (புவியியல், சமூக-கலாச்சார மற்றும் மொழியியல் சார்ந்தி குரைக்க ஒப்பீடு செய்யும் தரத்திலான இணையதன் தரவுகளையும் உள்ளீடுகளையும் தருகிறது.

* இது பாட நூல்கள். ஒலி, காணொலி, காலச்சுவடுகள் மற்றும் பலவிதமான அச்சு மற்றும் அச்சிடப்படாத பொருட்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி சார்ந்த மின் வளங்களை இணைதளம் மற்றும் தொலைபேசி செயலி மூலமாகவும் காண்பிப்பதற்கும், பரப்புவதற்கும் உதவுகிறது.

இ-தால் (e-Txal)

* இது இலக்கு சார்ந்த திட்டங்கள் உள்ளிட்ட தேசிய மற்றும் மாநில அளவிான மின்-ஆளுமை

திட்டங்களின் மின் பரிவர்த்தனை புள்ளி விவரங்களை பரப்புவதற்கான ஒரு வலைதளம் ஆகும். * இது பரிவர்த்தனை புள்ளி விவரங்களை இணைய வழி வலை பயன்பாட்டின் மூலம் முறையான கால இடைநிலையில் பெருகிறது. இது பல்வேறு மின்ஆளுகை திட்டங்களால் செய்யப்படும் பரிவர்த்தனை விரைவாக பார்ப்பதற்கு அட்டவணை மற்றும் வரைகலை வடிவத்தில் பரிவர்த்தனை எண்ணிக்கையில் விரைவான பகுப்பாய்வை முன்வைக்கிறது.

* இது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது.

 டிஜிட்டல் சக்சர்தா அபியான் அல்லது தேசிய டிஜிட்டல் கல்வியறிவத்திட்டம் (NDLM)

* நோக்கம்: அங்கன்வாடி, ASHA தொழிலாளர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் அங்கீகரிக்கப்பட்ட ரேஷன் அட்டை உறுப்பினர்கள் உட்பட 52.5 லட்சம் நபர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பயிற்சிகளை அளித்தல்.

உமாங் (பதிய தலைமுறை ஆட்சிக்கான ஒருங்கிணைந்த மொபைல் செயலி)

(UMANG)

* "டிஜிட்டல் இந்தியா" திட்டத்தின் கீழ் வரும் முக்கிய முன்முயற்சியாகும். * ஒன்றுக்கும் மேற்பட்ட மொபைல் செயலியை பயன்படுத்தும்போது, பயனர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை தனித்தல் மற்றும் பல்வேறு அரசு சார்ந்த சேவைகளை ஒரே தளத்தின் மூலமாக அளித்தல்,

* இது 1200-க்கும் மேற்பட்ட மத்திய மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் சேவைகளை

வழங்கும் 200 மொபைல் செயலியை ஒருங்கினைத்து எளியமுறையில் மக்களிடம் எடுத்துச் செல்ல

உதவுகிறது.மேலும் தனியார் துறையிலிருந்து சில முக்கியமான பயன்பாட்டு சேவைகளையும்
வழங்குகிறது.

ஸ்டார்ட் அப் இந்தியா செயலி

* இது இந்திய அரசாங்கத்தின் ஒரு முக்கிய முயற்சியாகும். இதன் மூலம் புதிதாக தொழில் தொடங்கும் கலாச்சாராத்தை ஊக்குவிப்பதற்கும் புதுமை மற்றும் தொழில் முனைவோருக்கான வலுவான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதும் இதன் முக்கிய

நோக்கமாக உள்ளது. * குறிக்கோள்: தொழில்முனைவோருக்கு ஆதரவளித்தல் மற்றும் இந்தியாவில் வேலை தேடுபவர்களுக்கு
பதிலாக, வேலை படைப்பாளிகளை உருவாக்க வழிவகை செய்வது

தூய்மை இந்தியா செயலி

* இது தூய்மை இந்தியா திட்டம் பற்றிய செய்திகளை வழங்கும். செயலியை பயன்படுத்துபவர்கள்.தங்களை சுற்றியுள்ள குப்பைகள் பற்றி புகாரளிக்கலாம்.

இந்தச் செயலியை மத்திய கலாச்சார அமைச்சகம் கண்காணிக்கிறது.

* மக்களிடம் தூய்மையின் முக்கியத்துவத்தை தெரியப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

 தமிழ்நாட்டின் மின்ஆளுமை
*தேசிய மின்ஆளுமை திட்டத்தின் கீழ், பல்வேறு மின்ஆளுமை திட்டங்களை செயல்படுத்தியதன் மூலம் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் (ICT) மற்றும் மின்ஆளுமை ஆகியவற்றை மேம்படுத்துவதில் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாகத் திகழ்கிறது.

* தேசிய மின்னாளுமை திட்டத்தின் நோக்கத்தில் தமிழக அரசு தன்னை இணைத்துக் கொண்டது.

தமிழ்நாடு மின் ஆளுமைத் திட்டம் 2007 ஆனது, தேசிய மின்ஆளுமைத் திட்டம் 2006ன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இதுவே தமிழ்நாடு மின்ஆளுமை முகைமை என்ற நோடல்.நிறுவனத்தை உருவாக்கியது.

தமிழ்நாடு மின்ஆளுமை முகமை (TNeGA)

 தமிழ்நாடு மின் ஆளுமை திட்டம் 2007ன் கீழ் தமிழ்நாடு மின்ஆளுமை முகமை உருவாக்கப்பட்டது.

தொலைநோக்கு பார்வை: நல்லாளுமையின் நோக்கங்களை தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தின் வாயிலாக செயல்முறைப்படுத்தி அரசு சார்ந்த சேவைகளை வெளிப்படைத்தன்மையுடனும் மேலும் அதனை திறம்பட மக்களிடத்தில் எடுத்துச் செல்ல மிகவும் உதவுகிறது.

 நோக்கங்கள்

• தமிழகத்தை ஒரு முதன்மையான தொழில்நுட்பம் மற்றும் புதுமையை அறிமுகம் செய்யும் மாநிலமாக உருவாக்குவது.

• தமிழ்நாட்டின் ஒவ்வொரு அரசு நிறுவனத்தினையும் காகிதப் பயன்பாடற்ற, இடையூறுகளற்ற, வெளிப்படைத்தன்மையுடன் மற்றும் நேரடி தொடர்புகளற்ற நிறுவனங்களாக மாற்றுதல்.

* அரசுத்துறைகள் மற்றும் அரசு நிறுவனங்களின் தகவல் தொழில்நுட்பத் தேவைகளை நிறைவு செய்வதில் ஒத்துழைப்பு நல்குதல் மற்றும் உதவுதல்.

பல்வேறு அரசுத்துறைகளின் பொதுவான சேவைகளின் தேவையை கண்டறிந்து குறைந்த செலவில் தரமான தீர்வுகளை வழங்குதல்,

ஆளுமை தொடர்பான சிக்கல்களுக்கு புதுமையான மற்றும் செயலபடுத்தக் கூடிய தீர்வுகளை அளித்திடும் வகையில், கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், தொடக்கநிலை நிறுவனங்கள். நிதி நிறுவனங்கள் மற்றும் திறமையான தனிநபர்களை கொண்ட ஒரு துடிப்பான சூழலை உருவாக்குதல்.

* நிர்வாகத்தில் செயல்திறனை மேம்படுத்த, அனைத்து அரசு ஊழியர்களுக்கும் தகவல் தொழில் நுட்பத்தில் அனைத்து நிலைகளிலும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்குதல்.. * மின் ஆளுமை குறித்த பயிலரங்குகள், கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள் நடத்துதல்.

 தமிழ்நாடு மின்ஆளுமை கொள்கையின் உள்கட்டமைப்பு

* இவை மக்களுக்கு அவரது இடத்திற்கே சேவைகளை கொண்டு சேர்ப்பதற்கான அடிப்படை நிர்வாக கட்டமைப்பை உருவாக்குவதற்கு ஒரு தூணாக விளங்குகிறது. (அதாவது மாவட்ட நிர்வாகம்)

* இது மின்னணு முறையில் அதிகளவில் அரசு சார்ந்த சேவைகளை மக்களுக்கு எடுத்துச் செல்லும் நோக்கத்திற்காக பின்தளத்தில் கணினி மையமாக்கும் வேலையை செய்கின்றது.

பொது கட்டமைப்பு

1. தமிழ்நாடு மாநில பெரும்பரப்பு வலையமைப்பு (TNSWAN)

2. தமிழ்நாடு மாநில தரவு மையம் (TNSDC)

3. பொது சேவை மையங்கள் (CSC), அதாவது இ-சேவை மையங்கள்

1. தமிழ்நாடு மாநில பெரும்பரப்பு அலையமைப்பு (TNSWAN)

* இது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமையகங்களையும், மாவட்ட

/ துணை நிலை தலைமையங்களின் தொகுதி நிலை வழியாக செங்குத்து படிநிலை கட்டமைப்பில் இணைக்கிறது.

* அதிகரிக்கப்பட்ட அலைவரிசை அனைத்து மின் ஆளுமை தகவல் தொழில்நுட்ப பயன்பாடுகளும் திறம்பட செயல்பட உதவுகிறது மற்றும் குடிமக்களை மையமாகக் கொண்ட சேவைகளை திறமை யான முறையில் வழங்க உதவுகிறது.

2. தமிழ்நாடு மாநில தரவு மையம் (TNSDC)

* மாநில தரவு மையமானது, திறம்பட்ட மின் விநியோகத்திற்கு தேவையான அடித்தளத்தை வழங்குகிறது.

* செயல்பாடுகள்: மாநிலத்தின் தகவல் தொழில்நுட்ப களஞ்சியம், பாதுகாப்பான தரவுகள் சேமிப்பு இடம், இணையவழியில் சேவைகளை வழங்குதல், மாநில சேவை விநியோகத் தளம் (SSDG) மற்றும்

மின் படிவங்கள்.

3. பொது சேவை மையங்கள் (CSC) இ-சேவை மையங்கள் * இது இணையம் வழியாக வழங்கப்படும் மின்னாளுமை சேவைகளை கிராமப்புறப் பகுதிகளுக்கு

எடுத்துச் செல்ல உதவுகிறது. இதில் விண்ணப்ப படிவங்கள், சான்றிதழ்கள் மற்றும் மின்சாரம், தொலைபேசி மற்றும் தண்ணீர் ரசீது போன்ற பயன்பாட்டு கட்டணங்கள் உள்ளடங்கும்.

* இது கிராமப்புற மக்களுக்கு பல்வேறு அரசு - மக்கள் ((i2C) மற்றும் அரசு - வணிக (G2B)

சேவைகளை தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப வசதி கொண்ட கிசோக்களின் (KiOSKS) மூலம் வழங்குகிறது.

மக்கள் தனம்: இ-சேவை தளமானது 70 வகையான ஆன்லைன் சேவைகளை வழங்குகிறது மற்றும் இது பொது சேவை மையம் மூலம் மட்டுமே இயங்குகிறது.

ii) பிற உள்கட்டமைப்புகள்

1 மெய் நிகராக்கம் மற்றும் மேகக்கணனி உள்கட்டமைப்பு * தற்போதுள்ள கணினி வளங்களை மெய்நிகராக்கம் செய்வது உள்பட "மேகக் கணினி உள்கட்டமைப்புகளை மாநில அரசாங்கத்ததால் நிறுவப்படும். 
 * முக்கியத்துவம்
: தகவல் தொழில்நுட்ப வளங்களை விரைவான, திறன்மிகுந்த, செலவு குறைந்த முறையில் அளவிடுதல் மற்றும் பகிர்தல்.

பேரிடர் மீடிபுமையம் மற்றும் அருகாமை போடர் மீட்பு மையம் * அரசு துறைகளின் தரவுகளை மீட்கும் சேவைகளுக்காக பேரிடர் மீட்பு மையம் மற்றும் அருகாமை இணையான பேரிடர் மீட்பு மையம் (NLDRC) நிறுவப்பட்டுள்ளது.

3. தேசிய அறிவுத்திறன் வலையமைப்பு (NKN), 2019
 * நோக்கம்: 
தேவையான ஆராய்ச்சி வசதிகளுடன் தரமான நிறுவனங்களை உருவாக்குதல் மற்றும்

அதிக பயிற்சி பெற்ற நிபுணர்கள் குழுவை உருவாக்குதல், * நாட்டின்அனைத்து பல்கலைக்கழகங்களையும், கல்லூரிகளையும், ஆராய்ச்சிநிறுவனங்களையும் இணைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஜிகா-பிட் வலையமைப்பு ஆகும்.

4. தேசிய ஒளியிழை அலையமைப்பு (NOFN) / (தற்போது பாரத்நேட் / தமிழ்நெட்), 2017

* நோக்கம்: இந்தியாவின் அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் பிராட்பேண்ட் இணைப்பை வழங்குதல். மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் கண்ணாடி இழை தட இணைப்பை வழங்குவதற்கும், மின்

ஆளுமை சேவைகள் மற்றும் மின் வலைதள பயன்பாடுகளை வழங்குவதை உறுதி செய்வதற்கும் பாரத் நெட் மற்றும் தமிழ்நெட் இரண்டையும் அரசாங்கம் பயன்படுத்துகிறது.

5. மாநில குடியிருப்போர் தகவல் தொகுப்பு மையம் (SRDHI), 2013-14

* இது ஆதார் இணைப்புடன் குடிமக்களின் தனித்துவமான மையப்படுத்தப்பட்ட தரவுத் தளத்தை வழங்குகிறது. இது மக்கள் தொகை குறித்த தகவல் சரிபார்ப்புக்கான ஒரே ஆதாரமாக செயல்படுகிறது.

* இது அனைத்து துறை சார்ந்த தரவுத் தளங்களையும் ஆன்லைனில் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி ஒருங்கிணைக்கிறது. * பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் பயனடையும் குடிமக்களை அடையாளம் காண்பதற்கான.வழிமுறையை வகுத்துள்ளது

. 6. டிஜிட்டல் கையொப்பம்

* மின்னணு பரிவர்த்தனைகளின் சரியான அடையாளம் மற்றும் அங்கீகாரத்தை செயல்படுத்த, ஆன்லைன் செயலாக்கத்திற்கான டிஜிட்டல் கையொப்பம் / மின் கையொப்ப வசதியை ஊக்குவித்தல்.

• ஒவ்வொரு துறையும் அவற்றின் தேவைக்கேற்ப பல்வேறு அதிகாரிகளிடம் டிஜிட்டல் கையொப்ப சான்றிதழ்கள் /மின் கையொப்ப வசதியை பெறுவதற்கான வசதியை ஏற்படுத்தும். * இந்த அதிகாரத்தையுடைய அதிகாரிகளுக்கு சரியான நேரத்தில் அறிவுறுத்தல்களும் பயிற்சியும் வழங்கப்படும்.

7. மின் அஞ்சல் மற்றும் மின் அஞ்சல் கொள்கை

* அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் அவர்களின் பெயரின் அடிப்படையில் தனித்துவமான மின்னஞ்சல் முகவரி வழங்கப்படும்.
நிறுவன அமைப்பு

தமிழ்நாட்டில் மின்ஆளுமை

1. மாநில இ-குறிக்கோள் அணி (SMeT) • மாநிலத்தில் உயர்ந்த முக்கிய முடிவெடுக்கும் அமைப்பு மற்றும் அது சார்ந்த உச்சக்குழுவை
ஆதரிக்க முன்மொழியப்பட்டது.
 * இது அனைத்து துறைகளுக்கும் மின்ஆளுமை ஆலோனைக் குழுவாக செயல்படும்
. மேலும் அந்தத் துறைகளுடன் நெருக்கமாக செயல்படும். * இத்திட்டம் தேசிய மின் ஆளுமைத் திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட முன் முயற்சியாகும். மேலும்

இத்திட்டத்திற்கான நிதியுதவி மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது. • SMct ஆனது திட்ட மேலாண்மை, தொழில்நுட்ப மேலாண்மை, நிதி மேலாண்மை மற்றும் மாற்று மேலாண்மை ஆகிய பிரிவுகளின் ஆலோசகர்களைக் கொண்ட ஒரு முக்கிய அமைப்பாகும்.

2. மாவட்ட மின் ஆளுமைச் சங்கங்கள் (DeGS)

• மாவட்ட மின்னாளுமை சங்கங்கள் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.

*சென்னையை தவிர, அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் இயங்கி.வருகின்றன
. சென்னையைப் பொறுத்த வரை, சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையரின்

தலைமையின் கீழ் இயங்கி வருகிறது. * பங்கு: மாவட்ட அளவிலான அனைத்து மின்னாளுமை தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்கி
வருகிறது. 

தமிழகத்தில் இ-சேவைகள் 

1. அரசு இ-சேவை மைங்கள், 2014

* நோக்கம்: இணைய வழியில், தொலைதூர கிராமத்திலிருக்கும் பொதுமக்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே அனைத்து சேவைகளையும் வழங்குதல். * மாநிலத்தின் வெவ்வேறு அரசுத் துறைகளின் மின் சேவைகளை ஒருங்கிணைந்த முறையில், ஒரு
பொதுவான இடத்தில் வழங்கும் நோக்கில் செயல்படுகின்றன.

* தற்போது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வழங்கும் சங்கங்கள் (PACCS), கிராமப்புற வறுமை ஒழிப்புச் சங்கங்கள் (VPRC), தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் (TACTV), வேளாண்மை அபிவிருத்திக்கான சர்வதேச நிதி நிறுவனம் (IFAD) மற்றும் கிராமப்புற தொழில் முனைவோர் (VLE) ஆகியவற்றின் மூலம் நடத்தப்படுகின்றன.

• 2014-ல் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் 10 பொது சேவை மையங்கள் தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் தொடங்கப்படும் என தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

2.நிரந்தரப் பதிவு மையங்கள் (PECs)

• ஆதார் பதிவுக்கான பதிவாளர் மின்னாளுமை இயக்குநரகம் (DeG) / தமிழ்நாடு மின்னாளுமை முகமை (TNeGA) ஆகியவை நியமிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் லிமிடெட் (TACTV) மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (ELCOT) ஆகியவை தமிழ்நாடு மின்னாளுமை முகமையின் கீழ் பதிவு முகவர்களாகச் செயல்பட இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) தமிழ்நாட்டில் நிரந்தரப் பதிவு மையங்களாக (PECs) நியமிக்கப்பட்டுள்ளனர்.

* இந்த சேவைகள் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. 3. மொத்த தீர்வுத்திட்டம், 2016 (Total Solution Project)

* குறிக்கோள்கள்: மாநிலத்தில் ஜிஎஸ்டி (GST), வாட் (VAT) மற்றும் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வராத பொருட்களின் மீதான சிஎஸ்டி (CST) வரியை வசூலிப்பதற்கும் மேலும் கணினி மையமாக்கப்பட்ட வரி நிர்வாகத்தை கொண்டு வருவதற்காகவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. கிடைத்தவை வணிகர்கள் இணையம் மூலமாக பதிவு செய்யலாம்.

• மின் கையொப்ப சான்றிதழுடன் மாதாந்திர விற்பனைகளை மின்னணு நமுனாக்கலாக தாக்கல் செய்யலாம்.

• மொத்த வணிக வரி வருவாயில் 99 சதவிகித வருவாயானது இணைய மற்றும் பிற முறைகளில் வசூலிக்கப்படுகிறது. * பொருட்கள் இடமாற்றத்திற்கான சோதனைச் சாவடி படிவங்கள் ஆன்லைனில் உருவாக்கப்படுதல்,

4. தமிழர் தகவலாற்றுப்படை 2017 விரிவான மற்றும் ஒருங்கிணைந்த களஞ்சியம்.

* தமிழர்கள், தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் அனைத்து சாதனைகள் பற்றிய விவரங்கள் இதில் அடங்கியுள்ளன.

5. தமிழ்நெட், 2017

• மாநிலத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளை இணைக்க மாநிலம் முழுவதும் கண்ணாடி இழை தட வலையமைப்பு அமைக்கப்பட்டு, அதிகவேக அலைக்கற்றை வழங்கப்பட்டுள்ளது.

* இதன் மூலம் டிஜிட்டல் புரட்சியின் நன்மைகள் மற்றும் அரசுத்துறைகளின் சேவைகளை நகர்ப்புற மக்கள் அவரவர் இல்லத்திலிருந்தே பெறமுடியும்.

பாரத் நெட், 2017

* நோக்கம்:
 நாட்டில் உள்ள அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளையும் பிராட் பேண்ட் மூலம் இணைத்தல்,

இந்தியாவிலுள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளை இணைக்க மாநிலங்கள் முழுவதும் கண்ணாடி இழை தட வலையமைப்பு அமைக்கப்பட்டு, அதிகவேக அலைக்கற்றை வழங்கப்பட்டுள்ளது.

E-அடங்கல் வலை பயன்பாடு, 2018 (இடங்கலின் இணைய அடிசும்) * கிராமம்/வட்டம்/மாவட்டம் மற்றும் மாநில அளவில் விவசாய உற்பத்தியைக் கணக்கிடும் ஒரு முக்கிய அடிப்படை வருவாய்துறை ஆவனமாக அடங்கல் கருதப்படுகிறது. இது கிராம நிர்வாக அலுவலரால் (VAO) பராமரிக்கப்படுகிறது.DUTED

7. தூண்டில் மொபைல் செயலி, 2018

* தமிழக அரசின் மீன்வளத்துறையும், தேசிய கடலோர ஆராய்ச்சி மையமும் (NCCR) இந்த செயலியை கொண்டு வந்து நாட்டிற்கே முன்னோடியாகத் திகழ்கிறது.

இந்தச் செயலி வானிலை முன்னறிவிப்பு, சாத்தியமான மீன்பிடி மண்டலம், அதிக முதம், சூறாவளி எச்சரிக்கை போன்ற நிகழ்நோ தகவல்களை வழங்குகிறது மற்றும் மீனவ சமூகத்திற்கான கரையோர தேவைகளையும் உணர்த்துகிறது.

இந்தச் செயலி சரியான முடிவெடுக்கும் வண்ணம் செயல்படுகிறது. இதனால் இயற்கை பேரழிவுகளின் போது கடலில் எண்ணற்ற உயிர்கள் காப்பாற்றப்படுகிறது.


மக்கள் எண்

• தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடியிருப்பாளருக்கும் "மக்கள் எண்.”என்ற எண் உருவாக்கப்பட்டுள்ளது.

• இந்த எண்ணானது மாநிலக் குடும்பத்தரவு தளம் அமைக்க அடித்தளமாக இருக்கும்.

• இந்த பயன்பாடு தங்குதடையற்ற வெளிப்படையான எளிதில் அணுகக்கூடிய அரசின் சேவைகளைப் பொதுமக்களுக்கு வழங்குகிறது.

தாய்மை, 2018

* மொபைல் அடிப்படையிலான செயலியை பயன்படுத்தி தாய்மார்களின் சுகாதாரத் தகவல்களை அறிதல்.

* காஞ்சிபுரம் மாவட்டம் நந்திவரம் தொகுதியில் "தாய்மை" செயலி சோதனை செய்து பார்க்கப்பட்டது. குறிக்கோள்கள்

* 2016-17 பிரசவத்தின் போது தாய் இறப்பு - 13% மற்றும் குழந்தை இறப்பு 6% ஆக குறைத்தல், • இத்திட்டத்தின் மூலம் மருத்துவமனைக்குச் செல்லாத தாய்மார்கள் தகவல்கள் இதில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

• பிரசவகாலத்தின்போது கண்கானிப்பு முறையை உருவாக்குதல் வேண்டும்.
மாநிலத்தில் குடியிருப்போரின் குடும்பத் தரவு தளம், 2019 (SFDB)

இது தமிழ்நாட்டில் குடியிருப்போரின் தரவுகளின் ஒற்றை ஆதரமாக விளங்கும்.

* SFDB மையப்படுத்தப்பட்ட பாதுகாப்பான முறையில் மின்னணுமயமாக்கப்பட்ட தரவுதளமாக விளங்குகிறது.

* நோக்கம்:
 பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கான பயனாளிகளைத் தங்குதடையின்றித் துல்லியமாக அறிந்திட உதவுகிறது.

10. தமிழ்நாடு பொறியியல் கல்வி சேர்க்கைகான கலந்தாய்வு, 2019

* கல்வி நிறுவனங்கள் வழங்கும் பட்டப்படிப்புகளைத் தேர்வு செய்யும் மாணவர்களுக்கு இணையவழி கலந்தாய்வினை நடத்த உயர்கல்வித்துறை நடத்துகிறது.

* தமிழ்நாடு மின்ஆளுமை முகைமை (TNEGA) இணையவழிக் கலந்தாய்விற்கான மெ

ன்பொருளை பயன்படுத்திடத் தேவையான தொழில்நுட்ப உதவியை வழங்குகிறது.

11.இ-அடங்கல் கைப்பேசி செயலி, 2019

* அடங்கலுக்கான கைப்பேசி செயலியைத் தமிழ்நாடு மின்ஆளுமை முகமை உருவாக்கியுள்ளது.

* இ-அடங்கலின் அனைத்து செயல்பாட்டுச் சேவைகளும் எளிய முறையில் இந்தச் செயலி மூலம் விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுகிறது.

12. குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் வலையமைப்பு, 2009

தேசிய மின் ஆளுமை திட்டத்தின் (NcGP) கீழ் கொண்டுவரப்பட்ட இலக்கு சார்ந்த திட்டம் (MMP). இது உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.

* நோக்கம்: 

காவல்துறை நவீனமயமாக்குதல். மேலும் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்க தேசிய அளவில் ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பினை உருவாக்குதல், 13. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கான உயர்தனிச் சிறப்பு மையம் (CEET), 2019

* அரசுத்துறைகளில் மென்பொருள் உருவாக்கம் மற்றும் உயர்தொழில்நுட்ப பயன்பாடு ஆகிய வற்றிற்கிடையே ஏற்படும் அறிவு இடைவெளியை சமன் செய்யும் ஒரு பாலமாக நிறுவப்பட்டுள்ளது.

* தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுத் துறைகளின் புதுமையான முயற்சிகளுக்கு உதவும் வினையூக்கியாக (Catalyst) விளங்குகிறது.

* இந்த மையம் தொழில்துறை, அரசுத்துறைகள், கல்வி நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் ஆகியவற்றின் உற்பத்தி மற்றும் தேவைகளை இணைக்கும் பாலமாக் விளங்குகிறது.

14. தமிழ்நாடு புவிசார் தகவல் அமைப்பு (TNGIS)

• புவிசார் தகவல் அமைப்பு இடம்சார் அல்லது புவிசார் தரவுகளைக் கண்டறிந்து சேமிக்கவும். கையாளவும், பகுப்பாய்வு செய்யவும், நீர்வகிக்கவும் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். * புவியியல் தகவல்களை ஒருங்கிணைத்தல், சேமித்தல், பகுப்பாய்தல், பகிர்தல் மற்றும் வெளிக்காட்டுதல் ஆகியவற்றை செய்யும் ஒரு தகவல் மேலாண்மை அமைப்பாகும்.
தமிழ்நாடு புவிசார் தகவல் அமைப்பில் தமிழ்நாடு மாநில இடம்சார் தரவு உட்சுட்டமைப்பு (TNGIS

-TNSSDT): புவிசார் தகவல் அமைப்பு தொடர்பான அனைத்து தகவல்களும் வெளியிடப்படுகின்றன.

15. கணினித் தமிழ்

* தமிழ் இணையக் கல்விக்கழகம் தமிழ் மென்பொருள் மேம்பாட்டு நிதியினைப் பயன்படுத்திக் கணினித் தமிழ் ஆராய்ச்சினை மேம்படுத்துகிறது. அடிப்படை தமிழ்தரவு, தமிழ் சம்பந்தப்பட்ட மெ

ன்பொருள் கருவிகள், ஒருங்குறி எழுத்துருக்கள் இன்னும் பிறவற்றை உருவாக்கி வருகிறது.

• தமிழ் இணையக் கல்வி கழகம் பிறரால் உருவாக்கப்பட்ட தமிழ் மென்பொருள். அதன் கருவிகளை பரிசோதித்துச் சான்றிதழ் அளிக்கிறது.

* தமிழ் இணையக் கல்விக்கழகம் அமெரிக்காவிலுள்ள ஒருங்குறி சேர்த்தியத்தில் (Unicode consortium) தமிழ்நாடு அரசின் சார்பில் உறுப்பினராக உள்ளது.

16. உழவன் மொபைல் செயலி, 2019

* நோக்கம்: விவசாயத்தில் காணப்படும் சிக்கல்களை தீர்ப்பதோடு, விதைகள், உரங்கள் போன்ற

முக்கியமான உள்ளீடுகளின் சமீபத்திய தொழில்நுட்பங்களையும் பங்கு நிலைகளையும் விவசாயிகளுக்கு தெரியவைத்தல்.

* “உழவன்” செயலி தமிழகத்தின் வேளாண்மைத் துறையால் உருவாக்கப்பட்டது. * செயற்கை நுண்ணறிவு(AI) தொழில்நுட்பத்துடன் மொத்தமாக 15 சேவைகள் விவசாயிகளுக்கு இதன் மூலம் கிடைக்கப் பெறுகிறது.

* கணினி இல்லாமலே முக்கியமான தகவல்கள் இதன் மூலம் கிடைக்கப் பெறுகிறது.

* இணையதளம்: வேளாண்மை தகவல் சேவை வலையமைப்பு (AGRINET).

 பண்ணை அழிகாட்டி

வேளாண் தொழில்நுட்ப தகவல்களை பரப்புதல் மற்றும் நிகழ் நேரத்தில் பிரச்சனைகளுக்குதீர்வு வழங்குதல்,

* பண்ணை பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குதல். * விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்காக உழவன் மொபைல் செயலி இந்தமுறையை கொண்டு வந்துள்ளது.

17. தமிழ் இலக்கியத்திற்கான மின் நூலகம்

• தமிழ் இணையக் கல்விக்கழகம் (TVA) ஒரு மின்நூலகத்தை (www.tamildigitallibrary,in)உருவாக்கியுள்ளது.

* இம்மின் நூலகத்தில் அரிதாக அச்சிடப்பட்ட புத்தகங்கள், நாளிதழ்கள், பருவ இதழ்கள், ஓலைச்சுவடிகள், கையெழுத்து பிரதிகள். ஒளிப்படங்கள் மற்றும் காணொளிகள் ஆகிய சேகரிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டும், மேம்படுத்தப்பட்டும் வருகின்றன.

• இந்த இணையதளம் மாற்றுத் திறனாளிகளும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

கணித்தமிழ் பேரவை


* தமிழ் நாடெங்கிலும் உள்ள நூறு உயர்கல்வி நிறுவனங்களில் "கணித்தமிழ்ப் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது.

* தமிழ் இணையக் கல்விக்கழகமும், மாணவர்களுக்குத் தமிழில் வலைப்பூக்கள் மற்றும் குறுஞ்செயலிகளை உருவாக்கப் பயிற்சி அளித்து வருகிறது.

20.இ-நகர் பஞ்சயாத்து

* இது ஒரு மென்பொருள் செயலியாகும். இது அனைத்து பஞ்சாயத்துகளுக்கும், பொதுமக்களுக்கு வலையமைப்பு மற்றும் செயலி அடிப்படையில் தீர்வு வழங்குகிறது. * பயன்பாடுகள்: சொத்து வரி, தண்ணீர் வரி, தொழில் வரி, வரி அல்லாத பிற கட்டணங்கள்

போன்றவற்றை ஆன்லைன் வழியாக செலுத்தலாம். * இது ஆன்லைன் வழியாக வரி செலுத்துபவை அதிகரித்துள்ளது.

21. இணையவழித் தேர்வுகளை சேவையாக வழங்குதல் (Eaas)

* இணைய வழித் தேர்வு முறையைப் பல்வேறு அரசுத்துறையில் தங்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப குறுகிய காலத்தில் பாதுகாப்பான முறையில் பயன்படுத்தப்படுகின்றன.

* இதில்தேர்விற்குமுந்தைய நிலை. தேர்வுநிலை மற்றும் தேர்விற்கு பிந்தைய நிலை செயல்பாடுகளும் அடங்கும்.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேன்ஞ் இன்பர்மேஷன் டெக்னாலஜி லிமிடெட் (NSEIT) என்ற நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இ-டெண்டர் முறை

* நிதித்துறையால் தொடங்கப்பட்டது.

தமிழ்நாட்டின் மின் கொள்முதல் அமைப்பாளது. ஏலம் எடுப்போருக்கு இலவசமாக டென்டர், பட்டியலை இலவசமாக பதிவிறக்கம் செய்து பின்னர் ஆன்லைனில் டென்பர் குறிப்பை-சமர்பிக்க வழிவகை செய்கிறது.

22. நம்பிக்கை இணையம் (தமிழ்நாடு பிளாக்செயின் கட்டமைப்பு) * இது தமிழகத்திலுள்ள அனைத்து துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான பிளாக்செயின் பயன்பாடுகளை உருவாக்குவதற்கும், உபயோகப்படுத்துவதற்கும் பயன்படுத்த கூடிய தளமாகும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!