விடுதலைப் போராட்டத்தில் மகளிரின் பங்கு
TNPSC ,TNPSC GROUP 4,TNPSC GROUP 2,TNPSC PORTAL,TNPSC GROUP 4 EXAM DATE,HOW TO APPLY TNPSC EXAM,WHAT IS TNPSC EXAM,TNPSC GRPUP 1,TNPSC GROUP 4 SYLLABUS
அன்னிபெசன்ட் அம்மையார்
✏️காலம் - 1847 முதல் 1933 வரை
✏️இயற்பெயர் - அன்னி உட்
✏️ஊர்- லண்டனில் ஐரிஷ் குடும்பத்தில் பிறந்தவர்.
🔥1893 ல் பிரம்ம ஞான சபை பணிக்காக இந்தியா வந்தார். 1875 ல் எச்.பி. பிளாவட்கி, எச்.எ. ஆல்காட் இருவரும் இணைந்து நியூயார்க்கில் பிரம்ம ஞான சபையை தோற்றுவித்தனர்.
🔥1907 அன்னிபெசண்ட் சென்னை அடையாரில் உள்ள பிரம்ம ஞான சபையின் தலைவரானார். இவர் ஹோம்ரூல் என்ற தன்னாட்சி இயக்கத்தை ஆரம்பித்தார்.
🔥1917 ல் கல்கத்தாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டுக்கு தலைமை வகித்தார். காங்கிரசுக்கு தலைமை வகித்த முதல் பெண் இவரே ஆவார்.
🔥இவர் காசியில் தொடங்கிய பள்ளிதான் பின்னர் காசி இந்து பல்கலைக்கழகமாகமாறியது.
🔥இந்திய மகளிர் சங்கத்தை நிறுவியவர் - அன்னிபெசன்ட் அம்மையார்.
🔥நான் ஒரு இந்தியா டாமாரம் என்றவர் - அன்னிபெசன்ட் அம்மையார்.
✏️மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
🔥மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் தேவதாசி மரபில் பிறந்து அதனை ஒழிக்க குரல்கொடுத்தவர்.
🔥அறிஞர் அண்ணாவால் தமிழகத்தின் அன்னிபெசன்ட் என அழைக்கபட்டவர் -மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்.
🔥காலம்: 1883 முதல் 27 06 1962
இவரது தந்தை கிருஷ்ணசாமி ஆவார்.
🔥தனக்கு இசையும் நாட்டியமும் கற்றுத்தந்த சுயம்பு என்பவரை மணந்தவர் மூவலூர்இராமாமிர்தம் அம்மையார்.
🔥1917ல் மயிலாடுதுறையில் தேவதாசி முறைக்கு எதிராக தனது முதல் போராட்டத்தை தொடங்கியவர் -மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
🔥 தன் வீட்டின் முன் கதர் அணிந்தவர்கள் உள்ளே வரவும், என எழுதி வைத்தவர் - மூவலூர் இராமாமிர்தம் அம்மையார். 1938 ல் நடந்த மொழிப்போரில் உறையூர் (திருச்சி) முதல் சென்னை வரை 42 நாள்,577 மைல் நடைப்பயணம் மேற்கொண்டு 87 பொதுக்கூட்டங்களில் உரையாற்றியவர் - மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்.
🔥1989 முதல் இவர் நினைவை போற்றும் வகையில் தமிழக அரசு ஏழை பெண்களுக்கான திருமண உதவித்தொகையை இவரின் பெயரில் வழங்கி வருகிறது.
✏️டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
🔥இயற்பெயர் ;முத்துலட்சுமி
🔥காலம் ஊர்; 30 07 1886 முதல் புதுக்கோட்டை 22 07 1968 வரை
🔥பெற்றோர் :நாராயணசாமி, சந்திரம்மாள்
🔥ஆசிரியர் பாலைய்யா என்பவரின் உதவியால் பள்ளியில் பயின்றவர் - டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.
🔥1912 மருத்துவ பட்டம் பெற்ற முதல் பெண்மணியாக திகழ்ந்தவர் - டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.
🔥1914 டாக்டர் சுந்தரரெட்டியைத் திருமணம் செய்துகொண்டவர் - டாக்டர் முத்துலட்சுமிரெட்டி.
🔥இவரின் மகன்கள் - இராம்மோகன், கிருஷ்ணமூர்த்தி ஆவர்.
🔥 லண்டனில் ராயல் புற்றுநோய் மருத்துவமனையில் புற்றுநோய் ஆய்வு செய்தவர்- டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.
🔥1926ல் பெண்கள் தேர்தலில் போட்டியிட சட்டம் இயற்றப்பட்டது. இந்தியாவின் முதல் பெண் சட்ட மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் - டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.
🔥தேவதாசி ஒழிப்புச் சட்டம், விபச்சார ஒழிப்புத் திட்டம், பெண்கள் திருமண வயதை உயர்த்தும் - சட்டம் போன்றவை இவர் செய்த பணிகள் ஆகும். 1930 ல் அவ்வை இல்லத்தை சென்னை அடையாரில் விதவைப் பெண்களுக்காக தொடங்கினார்.
🔥1933 ல் சிகாகோவில் நடந்த பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டார் 1949 ல் புற்றுநோய் நிவாரண நிதியை ஏற்படுத்தி இரண்டு ஆண்டுகள் முயன்று
🔥புற்றுநோய் நிலையத்தை அடையாற்றில் தோற்றுவித்தார்.
🔥இவர் 1956 ல் பத்மபூசண் விருது பெற்றார்.
🖋️தில்லையாடி வள்ளியம்மை
🔥ஊர் ஜோகன்ஸ்பர்க் (தென் ஆப்பிரிக்கா)
🔥பெற்றோர் ;முனுசாமி (புதுச்சேரி), மங்களம் (தில்லையாடி )
🔥காலம் 1898 முதல் 22 02 - 1914 வரை
சிறப்புகள்:
🔥1913 ல் தென் ஆப்பிரிக்காவின் திருமணச் சட்டத்தினை எதிர்த்து காந்தியடிகள் தலைமையேற்று போராட்டத்தை நடத்தினார்.
🔥தில்லையாடி வள்ளியம்மை 23 - 12 1913 ல் வால்கஸ்ரஸ்ட் என்ற இடத்தில் நடந்த அறப்போரின் போது கைது செய்யப்பட்டார்.
🔥உடல் நலம் குன்றிய நிலையில் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டவர் - தில்லையாடி வள்ளியம்மை,சிறைத் தண்டனைக்காக நீ வருந்துகிறாயா? என்று காந்தியடிகள் கேட்டபோது உடல் தளர்ந்திருந்த நிலையிலும் இல்லை, இல்லை, மீண்டும் சிறை செல்லத் தயார் என்றவர் -தில்லையாடி வள்ளியம்மை.
🔥இவர் 22-02-1914 ல் தனது 16 வயதில் இறந்தார். * “என்னுடைய சகோதரியின் மரணத்தை விடவும் வள்ளியம்மையின் மரணம் எனக்குப் பேரிடியாக இருந்தது" என்றார் - காந்தியடிகள்.
🔥 நம்பிக்கைதான் அவரது ஆயுதம் என்று தில்லையாடி வள்ளியம்மை குறித்து இந்தியன் ஒப்பீனியன் என்ற இதழில் காந்தியடிகள் எழுதியுள்ளார்.
🔥தென்னாப்பிரிக்க வரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரகம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். தில்லையாடி ஊர் நாகபட்டினத்தில் உள்ளது.
🔥காந்தியடிகளை மகாத்மா என்ற உயர்நிலை நோக்கி திருப்பிய பெருமை தில்லையாடி வள்ளியம்மைக்கு உண்டு.
🖊️இராணி மங்கம்மாள்
🔥இவர் மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரின் மனைவி ஆவார்.
🔥இவரின் மகன் அரங்க கிருட்டின முத்துவீரப்பன்.
🔥இராணி மங்கம்மாளின் மருமகள் சின்னமுத்தம்மாள்,
🔥இராணி மங்கம்மாளின் பெயரன் விசயரங்கச் சொக்கநாதனை 1688 ல் அரியணையில் அமர்த்தினார்.
🔥நேர்மையை காட்டிலும் உயர்ந்த தெய்வம் இல்லை என்றவர் - இராணி மங்கம்மாள். * திருவிதாங்கூர் மன்னர் இரவிவர்மா வரி செலுத்தாமல் கல்குளம் பகுதி நாயக்கர்படையை தாக்கி அழித்தார். இதனால் இராணி மங்கம்மாள் தளபதி, நரசப்பையன்தலைமையில் படையை அனுப்பி இரவிவர்மாவை தோற்கடித்தார். தஞ்சை மன்னர் ஷாஜி மதுரை படைகளை தாக்கியதால் நரசப்பையன் தலைமையில் இவரின் காலத்தில் மைசூர் மன்னன் சிக்க தேவராயன் காவிரியில் அணை கட்டபடையை அனுப்பி வெற்றி பெற்றார்.முயன்றதால் சிக்கல் ஏற்பட்டது. சமயத் தொடர்பாக சிறை வைக்கப்பட்ட மெல்லோ பாதிரியாரை விடுதலை செய்தவர் -இராணி மங்கம்மாள்.
🔥 போசேத் என்று குருவைத் தன் அரசவையில் வரவேற்று விருந்தோம்பினார்.
🔥கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த சாலை, மங்கம்மாள் சாலை என அழைக்கப்படுகிறது.
🔥குதிரைகள் பசுக்கள் காளைகள் முதலியன நீர் அருந்துவதற்கு வசதியாக சாலையோரங்களில் தண்ணீர்த் தொட்டிகளை அமைத்தவர் - இராணி மங்கம்மாள்.
🔥 ஆனித்திங்களில் ஊஞ்சல் திருவிழா நடைபெற ஏற்பாடு செய்தவர் - இராணிமங்கம்மாள். இராணி மங்கம்மாவை, துயரங்களைத் தாங்கிக் கொண்டு ஆட்சிக் கடமைகளை அழகுற ஆற்றக் கூடிய வீராங்கனை என மக்கள் போற்றிப் புகழ்ந்தனர்.
TNPSC ,TNPSC GROUP 4,TNPSC GROUP 2,TNPSC PORTAL,TNPSC GROUP 4 EXAM DATE,HOW TO APPLY TNPSC EXAM,WHAT IS TNPSC EXAM,TNPSC GRPUP 1,TNPSC GROUP 4 SYLLABUS