TNPSC தேர்வர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வழங்கும் தேர்வுக்கான டிப்ஸ்
TNPSC GROUP 4 ,TNPSC GROUP 4 SYLLABUS,TNPSC GROUP 4 NOTIFICATION,GROUP 4 TAMIL NOTES,GROUP 2 TEST SERIES,TNPSC DAILY CURRENT AFFAIRS,GROUP 4 TAMIL NOTES,TNPSC MATERIALS
1. முதலில் எல்லோரும் எந்த தேர்விற்காக படித்து கொண்டு இருக்கிறோமோ அந்த தேர்வு பாடத்திட்டம் என்ன (Syllabus) என்று நன்றாக தெரிந்திருக்க வேண்டும். ஒரு முறைக்கு ஐந்து முறையாவது (Syllabus) நன்றாக படித்து பார்க்க வேண்டும்
2) பள்ளி பாடப் புத்தகத்தை மட்டுமே முதலில் படிக்க வேண்டும் (TNPSC). தேர்வில் படித்து வெற்றி பெற்றவர்கள் அனைவருமே பள்ளி புத்தகத்தை படித்தவர்கள் தான்..700 தயவு செய்து மார்கெட் புத்தகம் வாங்கி உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
3) தினமும் ஒரு குறைந்தபட்சம் மூன்று மணிநேரம் ஒதுக்கி படித்தால் போதும் தேர்வில் வெற்றி பெறலாம்
4) படிக்கும் போது ஒரு சில பேருக்கு தூக்கம், சோர்வு வரும். அது மனித இயல்பு. அப்போது ஒரு பத்து நிமிடம் உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள். பாட்டு கேளுங்கள்; மன அமைதி, உற்சாகம் வரும். பிறகு படிக்கலாம்.
5) மனித மனம் குரங்கு மாதிரி மாறிக்கொண்டே இருக்கும். திட்டம் போட்டு படியுங்கள். இந்த நாளில் நம் என்ன படிக்க வேண்டும் என்று திட்டமிட்டு திட்டமிட்டபடி அந்த நாளுக்கான பகுதியை அன்றே படித்து முடித்து விட்டால் நீங்கள் தான் வெற்றியாளர்.
TNPSC GROUP 4 ,TNPSC GROUP 4 SYLLABUS,TNPSC GROUP 4 NOTIFICATION,GROUP 4 TAMIL NOTES,GROUP 2 TEST SERIES,TNPSC DAILY CURRENT AFFAIRS,GROUP 4 TAMIL NOTES,TNPSC MATERIALS
6) உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், சில நேரம் நம் பெற்றோர்கள் கூட புரிந்து கொள்ளாமல் பேசுவார்கள். எத்தனை மாதங்கள், வருடங்கள் நீ படித்து கொண்டே இருப்பாய்.. வேற வேலை பார் அப்படி இப்படி பேசுவார்கள்... அரசு வேலை கிடைக்க உன் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று சொல்வார்கள். எதையும் காதில் வாங்காமல் உங்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துங்கள்.
7) நீங்கள் வெற்றி பெற்றால் அப்படி எல்லாம் முன்னாடி பேசின அனைவரும் ஒரே வார்த்தை தான் கூறுவார்கள். எனக்கு முன்னாடியே தெரியும் நீ வெற்றி பெறுவாயென்று... அதான் மனித குணம்
8) எத்தனை கோச்சிங் சென்டர் எவ்வளவு பேர் வந்து சொல்லி தந்தாலும் நீங்கள் நன்றாக படித்தால் மட்டுமே அரசு வேலை கிடைக்கும்.
9) தயவு செய்து அரசு வேலைக்காக யாரிடமும் பணம் தந்து ஏமாற வேண்டாம். படித்து தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு வேலை கிடைக்கும். 100 %உண்மை. இதை படிக்கின்ற மாணவ மாணவிகள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
10) இருக்கின்ற காலம் நேரம் மனதில் வைத்து கொண்டு நன்றாக படியுங்கள். கண்டிப்பாக கடின உழைப்பு எப்போதும் தோல்வி ஆனது என்று சரித்திரம் இல்லை. அதை சரியாக பயன்படுத்தியவர்கள் மட்டுமே.. 700
2022ஆம் ஆண்டு வருகின்ற அனைத்து தேர்வுகள் வெற்றி பெற்று உங்களுக்கு பிடித்த துறை தேர்ந்தெடுத்து உண்மையாகவும் நேர்மையாகவும் லஞ்சம் வாங்காமல் பணியாற்ற இந்த ஆண்டு இனிய ஆண்டாக அமையட்டும்..
TNPSC GROUP 4 ,TNPSC GROUP 4 SYLLABUS,TNPSC GROUP 4 NOTIFICATION,GROUP 4 TAMIL NOTES,GROUP 2 TEST SERIES,TNPSC DAILY CURRENT AFFAIRS,GROUP 4 TAMIL NOTES,TNPSC MATERIALS