TNPSC -தினசரி நடப்பு நிகழ்வுகள் NOV 15

TNPSC GROUP 1 DAILY CURRENT AFFAIRS , DAILY CURRENT AFFAIRS
                  TNPSC  செய்திகள்

இந்தியாவின் முதலாவது நேரடி தேசிய யோகாசன சாம்பியன்சிப் போட்டியானது ஓடிசாவிலுள்ள புவனேஷ்வர் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது ஒடிசா மாநிலத்துடன் இணைந்து தேசிய யோகாசன விளையாட்டுக் கூட்டமைப்பினால் நடத்தப்படுகிறது.
கத்தாரில் நடைபெற உள்ள 2022 FFA உலகக் கோப்பைப் போட்டிக்குத் தேர்வான முதல் தென் அமெரிக்க அணியாக பிரேசில் அணி மாறியுள்ளது. PGIM இந்திய பரஸ்பர நிதியமானது இந்தியாவின் முதல் உலகளாவிய வீட்டு மனைப்பத்திர நிதியத்தினைத் தொடங்கியுள்ளது.

*மத்திய உள்துறை அமைச்சகமானது ஹரியானாவிலுள்ள ஃபடேஹாபாத் (Fatehabad) மாவட்டத்தின் பட்டுக் கலன் காவல் நிலையத்தினை 2021 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் முதல் மூன்று முன்னணி காவல் நிலையங்களில் ஒன்றாக அங்கீகரித்து உள்ளது.

இந்தியாவின் ஸ்பைஸ்ஜெட் விமானநிறுவனமானது, பயணிகள் தங்களது பயணச் சீட்டுகளுக்கு 3, 6 அல்லது 12 தவணைகளில் பணம் செலுத்தும் வகையிலான புதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவிலேயே முதன்முறையாக இது போன்ற ஒரு திட்டமானது தொடங்கப் பட்டுள்ளது.

தமிழ்நாடு செய்திகள்

வினிஷா உமாசங்கர்


ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 26வது காலநிலைப் பங்குதாரர்கள் மாநாட்டில் சூரிய சக்தியினால் இயங்கும் ஒரு சலவை வண்டி பற்றிய தனது கருத்தாக்கத்திற்காக வேண்டி 2021 ஆம் ஆண்டிற்கான புவி தினக் கட்டமைப்பின் எழுச்சி நாயகியாக இவர் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 வயதான சிறுமி ஆவார்.

இந்த நடமாடும் சலவை வண்டியானது சூரிய மின்தகடுகளின் மூலம் நீராவி சலவைப் பெட்டியை இயக்குகிறது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னிச்சையான அமைப்பான இந்திய தேசியப் புத்தாக்க அறக்கட்டளையினால் உருவாக்கப்பட்ட டாக்டர் A.P.J அப்துல் கலாம் IGNITE என்ற விருதினையும் இவர் பெற்றுள்ளார்.

அங்கன்வாடி ஊழியர் பணிகளில் 25% இட ஒதுக்கீடு

 அங்கன்வாடி ஊழியர்கள், சிறு ஊழியர்கள் மற்றும் உதவியாளர் பணிகளில் 25% வரை விதவைகள் மற்றும் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தமிழக அரசு ஆணை ஒன்றைப் பிறப்பித்துள்ளது. ஏற்கனவே, மதிய உணவுத் திட்டப் பணியாளர் பதவிகளில் விதவைகள் மற்றும் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு நடவடிக்கையானது செயல் முறையில் உள்ளது.

அங்கன்வாடிகளுக்கு ஊழியர்களை நியமிக்கும் விதிகளானது 2012 ஆம் ஆண்டில் இயற்றப் பட்டது.

தேசியச் செய்திகள்

ரெசாங் லா போர் நினைவிடம்

 இந்திய இராணுவமானது லடாக்கில் உள்ள ரெசாங் லா போர் நினைவிடத்தை மறு சீரமைத்துள்ளது. இது எல்லை மெய்க்கட்டுப்பாட்டுப் பகுதியின் மற்றொரு பக்கத்திலிருந்துப் பார்க்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது.

ரெசாங் லா என்பது 1962 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில்

போர் நடைபெற்ற ஒரு முக்கிய போர்த் தளமாகும் ரெசாங் லா இந்திய நிர்வாகத்திற்குட்பட்ட லடாக் மற்றும் சீன நிர்வாகத்திற்குட்பட்ட ஸ்பாங்குர் ஏரிப் படுகை ஆகியவற்றிற்கு இடையே உள்ள எல்லை மெய்க் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்த ஒரு மலைப்பாதை (கணவாய்) ஆகும்.

ஆராய்ச்சிக்கான முதலாவது சிறப்பு மையம்

 ஆளில்லா விமானத் தொழில்நுட்பம்          முதலாவது சிறப்பு மற்றும்  செயற்கை ஆராய்ச்சிக்கான மையமானது அசாமிலுள்ள கவுகாத்தியில் திறக்கப் பட்டது.

இது கவுகாத்தியின் இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் மத்திய அமைச்சர் V.K. சிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

KGB கவசம்

இது மலப்புரத்தினைத் தலைமையிடமாகக் கொண்ட கேரள கிராமின வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது கோவிட்-19 தடுப்பூசியின் முதல் (அ) இரண்டு தவணையையும் செலுத்திக் கொண்டவர்களால் மேற்கொள்ளப் படும் வைப்புத் தொகைகள் மீது அதிக வட்டியினை வழங்குகிறது. 

தடுப்பூசியைச் செலுத்திக் கொள்வதற்கு மக்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த முன்னெடுப்பானது மேற்கொள்ளப்படுகிறது.

அரசின் தடுப்பூசி வழங்கும் பிரச்சாரத்திற்கு ஒரு கிராமப்புற வங்கி ஆதரவு திரட்டுவது இந்தியாவில் இதுவே முதல் முறையாகும்.

ஊட்டச்சத்து விழிப்புணர்விற்கான திறன்மிகு கிராமம்

 மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இந்தத் திட்டத்தினைத் தொடங்கிவைத்தார்.

 இந்தத் திட்டமானது இந்தியாவிலுள்ள 75 கிராமங்களைச் சென்றடைவதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தத் திட்டமானது கிராமங்களில் ஊட்டச்சத்து குறித்த ஒரு விழிப்புணர்வை அதிகரிக்கும்.

நாட்டின் கிராமப்புறப் பகுதிகளில் ஊட்டச்சத்து குறித்த ஒரு விழிப்புணர்வை ஊக்குளிப்பதையும் அது சார்ந்த நடவடிக்கை மீதான மாற்றங்களைக் கொண்டு வருவதினையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

 இந்தத் திட்டமானது வேளாண்மை செய்யும் பெண்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் ஆகியோரை இலக்காக வைத்துச் செயல்படுகிறது.

மிகப்பெரிய நிலப்பரப்பு வாயு மற்றும் அழுத்தப்பட்ட உயிரி வாயு ஆலை

இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் உலகின் முதலாவது நிலப்பரப்பு வாயு மற்றும் அழுத்தப் பட்ட யிேரி வாயு ஆலையானது ஹைதராபாத்தில் நிறுவப்பட்டுள்ளது.
ராம்கி என்விரோ லிமிடெட் என்ற நிறுவனமானது ஹைதராபாத் ஒருங்கிணைந்த மாநகராட்சி கழகத்தின் திடக்கழிவுத் தளத்தில் இந்த ஆலையினைத் திறந்துள்ளது,

இந்த ஆலையானது வாகன எரிபொருளாக நிலத்தில் குவிக்கப்பட்ட பொருட்களில் உருவாகும் வாயுவினை அழுத்தப்பட்ட ஒரு உயிரி வாயுவாக மாற்றும். இது கார்பன் பிடிப்பு சுற்றுச்சூழலில் குறைவான பசுமை இல்ல வாயு வெளியீடு மற்றும் வாகன உற்பத்தித் தொழில்துறையைப் பசுமைமயமாக்கல் போன்ற பல நன்மைகளை வழங்குகிறது.

உயர்லட்சிய பிராந்தியத் தலைமைத்துவ விருது

மகாராஷ்டிரா மாநிலமானது முதலாவது உயர்லட்சிய பிராந்தியத் தலைமைத்துவ விருதினைப் பெற்றுள்ளது.

இந்த விருதானது ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்ற உச்சி மாநாட்டுடன் ஒருங்கே நடைபெற்ற அண்டர்2 கூட்டணி பொதுச் சபையில் (Inder2 Coalition General Assembly) வழங்கப்பட்டது.

மகாராஷ்டிரா மாநிலமானது பசுமை இல்ல வாயு உமிழ்வுத் தணிப்பு நடவடிக்கைக்கான பிராந்திய அரசுகளின் உலகளாவிய அண்டர்2 கூட்டணியில் ஜூலை மாதத்தில் இணைந்தது

மகாராஷ்டிரா மாநிலமானது பருவநிலைக் கூட்டிணைவுகள் மற்றும் புதுமையான பருவநிலைத் தீர்வுகள் ஆகிய மற்ற இரு பிரிவுகளில் அதிக மதிப்புகளைப் பெற்றது.

கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் கியூபெக் ஆகிய நகரங்கள் இந்த இரு பிரிவுகளில் விருதுகளை வென்றன. அண்டர்2 என்ற ஒரு கூட்டணியானது பருவநிலை நடவடிக்கைக்காக உறுதிப்பாடு

மேற்கொண்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் அடங்கிய மிகப்பெரிய ஒரு உலகக் கட்டமைப்புகளுள் ஒன்றாகும்.

சத்தீஸ்கர், ஜம்மு & காஷ்மீர், தெலுங்கானா மற்றும் வங்காளம் ஆகியவையும் இந்தக் கூட்டணியின் ஓர் அங்கமாகும்.

சர்வதேசச் செய்திகள்

சீனாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம்

சீனப் பொதுவுடைமைக் கட்சியானதுஅரிதான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்மானத்தினை நிறைவேற்றியுள்ளது. இது சீனாவின் மறுமலர்ச்சியில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் ஒரு தீர்க்கமான முக்கியத்துவத்தினைப் பாராட்டுவதற்கானதாகும்.

இது சமூகவாதப் புரட்சி மற்றும் கட்டமைப்புகளுள் ஒன்றாக இந்தக் காலத்தை குறிப்பிடுகிறது.



 இது சீனப் பொதுவுடைமைக் கட்சியின் 100 ஆண்டுகால வரலாற்றில் இது போன்ற 3வது தீர்மானமாகும்.
மற்ற இரு தீர்மானங்கள் மா சேதுங் (1945) மற்றும் டெங் சியாபிங்க் (1981) ஆகியோர் தலைமையில் நிறைவேற்றப்பட்டன.

 மா சேதுங் 1949 ஆம் ஆண்டில் அந்நாட்டில் பொதுவுடைமையாளர்களை அரசு அதிகாரத்திற்குக் கொண்டு வந்தார்.

டெங் சியாபிங், 1980 ஆம் ஆண்டுகளில் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் சீனாவை ஒரு பொருளாதார ஆற்றல் மையமாக உருவாக்கியது. சீனப் பொதுவுடைமைக் கட்சியானது 2018 ஆம் ஆண்டில் அதிபர் பதவிக்காலம் மீதான வரம்புகளை நிராகரித்தது.

பருவநிலை மாற்றத்தினால் அவதி

பருவநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளியாக கனடாவைச் சேர்ந்த ஒரு பெண்மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள நெல்சன் எனுமிடத்தில் அமைந்த

கூட்னே லேக் என்ற மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர் கெய்லே மெரிட் இந்த
நோயாளிக்கு ஏற்பட்ட பாதிப்பைக் கண்டறிந்துள்ளார்.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஏற்பட்ட தீவிரமான வெப்பக் காற்றலைகளே இவரின் இத்தகைய நிலைக்குக் காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த வெப்பக் காற்றலைகளானது 'வெப்ப குவிப்புப் பகுதி' என்பதால் ஏற்பட்டது.

இது ஓர் 'உயர் அழுத்த முகடாகும்."

பொருளாதாரச் செய்திகள்

வேளாண் பொருள்களுக்கான ஊக்கத் தொகை



பொருளாதார விவகாரங்கள் மீதான
அமைச்சரவைக் குழுவானது பருத்தி,
கரும்பு மற்றும் பல் சணல் விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்காக நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.



இது கரும்புச் சாறிலிருந்துப் பிரித்தெடுக்கப்பட்ட எத்தனாலைப்
வேண்டி பெட்ரோலுடன் கலப்பதை ஊக்குவிப்பதற்காக வேண்டி அதன் விலையை அதிகரித்துள்ளது.
மேலும் இது சரக்குப் பொதிகளில் சணல் பயன்பாட்டினைக் கட்டாயமாக்கும் பதிவு விதிகளுக்கு தனது ஒப்புதலை அளித்துள்ளது.

இந்த ஒப்புகலூடன் 100% உணவு தானியங்கள் மற்றும் 20% கரும்பு ஆகியவை சணல் பைகளில் அடைக்கப்பட வேண்டும்.

பெட்ரோலுடன் எத்தனாலைக் கலப்பது 2022 ஆம் ஆண்டிற்குள் 10% வரையும் 2024 ஆம்

ஆண்டிற்குள் 20% வரையும் எட்டும் என இதன் மூலம் எதிர்பார்க்கப் படுகிறது,

எண்ணெய்ச் சந்தைப்படுத்தும் நிறுவனங்களானது சுத்திகரிப்பு மையங்கள் மற்றும் சர்க்கரை ஆலைகளிடமிருந்து அரசு நிர்ணயித்த வீதத்திலேயே எந்தனாலைக் கொள் முதல் செய்கின்றன.

எத்தனால் கலப்புத் திட்டமானது கச்சா எண்ணெய் இறக்குமதியைச் சார்ந்து இருப்பதைக் குறைத்துள்ளது.

பிரபலமானவர்கள், விருதுகள், மற்றும் நிகழ்வுகள் 

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா மற்றும் எலான் மஸ்கின் நிறுவனமான

ஸ்பேஸ் x ஆகியவை 'Crew 3' என்ற விண்கலத்தை விண்ணில் ஏவியது.

இந்தத் திட்டமானது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசாவின் விண்வெளி வீரரான ராஜா சாரி என்பவரை அதன் திட்ட ஆணையராகக் கொண்டது.

இத்திட்டத்தின் கீழ் நான்கு விண்வெளி வீரர்கள் 6 மாத அறிவியல் திட்டத்திற்காக
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப் பட்டுள்ளனர்.

முக்கிய தினங்கள்

உலக கருணை தினம் - 13 நவம்பர்

இத்தினமானது 1998 ஆம் ஆண்டில் உலசு கருணை இயக்க அமைப்பினால் அறிமுகப் படுத்தப் பட்டது.

சிங்கப்பூர் நாடானது 2009 ஆம் ஆண்டில் முதன்முறையாக இத்தினத்தினை அனுசரித்தது.

Read Also :-
Labels : #NOVEMBER DAILY CA ,
Getting Info...

Post a Comment