TNPSC துளிகள்
மைகரோசாப்ட் கார்ப்பரேசன் நிறுவனமானது ஆப்பிள் நிறுவனத்தை விஞ்சி சந்தை மூலதனத்தில் உலகின் மிகவும் மதிப்புமிக்க ஒரு பொது வர்த்தக நிறுவனமாக மாறி உள்ளது.
மத்திய அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் உத்தரகாண்டின் முசௌரியிலுள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாகப் பயிற்சி நிறுவனத்தில் சர்தார் படேல் தலைமைத்துவ மையத்தினைத் திறந்து வைத்தார்.
இந்த வசதி மையமானது 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று நடைபெற்ற ராஷ்டிரிய ஏக்தா இவாஸ் அன்று திறந்து வைக்கப் பட்டது.
ஆசிய மேம்பாட்டு வங்கியானது இந்தியாவின் தேசியத் தொழில்துறை வழித்தட மேம்பாட்டுத் திட்டத்திற்கு உதவி வழங்குவதற்காக 250 மில்லியன் டாலர் கடனுக்கு (ரூ.1575 கோடி) ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது 17 மாநிலங்களில் 11 தொழில்துறை வழித்தடங்களை உருவாக்குவதற்காக 500 மில்லியன் டாலர் கடன் வழங்கும் திட்டத்தின் முதல் துணைத் திட்டமாகும். தேசிய சிறியத் தீப்பெட்டித் தயாரிப்பாளர்கள் சங்கமானது ஒரு தீப்பெட்டியின் விலையை 1 ரூபாயிலிருந்து 2ரூபாயாக உயர்த்தியுள்ளது.
2007 ஆம் ஆண்டில் ஒரு தீப்பெட்டியின் விலையானது 50 பைசாவிலிருந்து 1 ரூபாயாக உயர்த்தியதற்குப் பிறகு 14 ஆண்டுகள் கழித்து இந்த விலை உயர்வானது அறிவிக்கப் பட்டுள்ளது. உலக சைவ உணவுப் பழக்கத் தினமானது ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 1 அன்று அனுசரிக்கப் படுகிறது.
மனிதர்கள், மனித இனத்தைச் சாரா விலங்குகள் மற்றும் இயற்கை சூழல்களுக்கு சைவ உணவுப் பழக்கத்தால் ஏற்படும் நன்மைகளைப் பரப்பும் நோக்கத்துடன் இத்தினம் அனுசரிக்கப் படுகிறது.
தேசியச் செய்திகள்
பருவநிலைச் சமவிகித கண்காணிப்பு அமைப்பு
பருவநிலைச் சமவிகித கண்காணிப்பு அமைப்பு என்பது சமீபத்தில் தொடங்கி வைக்கப் பட்ட ஓர் இணையவழி முகப்புப் பக்கமாகும்.
இந்தியாவினுடைய பருவநிலைச் சமவிகிதக் கண்காணிப்பு அமைப்பானது, உலகம் முழுவதுமான பருவநிலை நடவடிக்கை உமிழ்வு நிலையிலுள்ள ஏற்றத் தாழ்வுகள், ஆற்றல் மற்றும் வள நுகர்வு மற்றும் பல நாடுகளின் தற்போதையப் பருவநிலை கொள்கைகளை மதிப்பிடும்.
இது முக்கியப் பிரச்சினைகள் குறித்த ஒரு நீவிர விவாதத்தினை ஏற்படுத்தி அதில் அனைத்து நாடுகளின் நிபுணர்களையும் ஈடுபடச் செய்யும்.
NCLAT தலைவர் -அசோக் பூசன்
மத்திய அரசானது உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி அசோக் பூசன் அவர்களை தேரிய நிறுவனச் சட்ட மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் புதிய தலைவராக நியமித்துள்ளது
இவர் கேரள உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவார்.
இந்தத் தீர்ப்பாயமானது 2013 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் 410 ஆவது பிரிவின் கீழ் அரசினால் உருவாக்கப் பட்டது
.
நவம்பர் 01;
இந்தியாவில் ஆந்திரப் பிரதேசம், ஹரியானா, சத்தீஸ்கர், கேரளா, கர்நாடகா, பஞ்சாப் & மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்கள் மற்றும் லட்சத்தீவு, புதுச்சேரி ஆகிய இரு ஒன்றியப் பிரதேசங்கள் ஆகியவை 2021 ஆம் ஆண்டு நவம்பர் 01 அன்று அவற்றின் ஸ்தாபள தினத்தைக் கொண்டாடுகின்றன.
கர்நாடகத்தில் இத்தினமானது இராஜ்யோத்சவ் எனக் கொண்டாடப்படுகிறது. முன்பாக தமிழ்நாடு மாநிலமும் நவம்பர் 01 அன்று அதன் ஸ்தாபன தினத்தைக் கொண்டாடி வந்தது,
2021 ஆம் ஆண்டு அக்டோபர் 30 அன்று தமிழகத்தின் ஆளும் கட்சியான தி.மு.க. ஜூல்வை 18-ஆம் தேதியானது தமிழ்நாட்டின் ஸ்தாபன தினமாக கொண்டாடப்படும். என அறிவித்தது.
டெய்ரி சஹாகர் திட்டம்
மத்தியக் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா-தேசியக் கூட்டுறவு மேம்பாட்டுக்கழகத்தின் டெய்ரி சஹாகர் என்ற திட்டத்தினைத் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் ஒட்டு மொத்த குறிக்கோள்களானது, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல் மற்றும்.ஆதம நீர்பர் பாரத ஆகும்.
5000 கோடி ரூபாய் முதலீட்டுடன் கூட்டுறவு முதல் செழிப்பு வரை" (from cooperation to prosperity) என்ற ஒரு நோக்கத்தைச் செயலாக்குவதற்காக வேண்டி இந்த டெய்ரி சஹாகர் திட்டமானது அமல்படுத்தப்படும்.
சர்வதேசச் செய்திகள்
மிலு மான்
அழிவின் விளிம்பிலிருந்து மிலு வகை மான் இனம் மீண்டு வந்தது சீனாவின் வளங்காப்பு முயற்சிகளுக்குக் கிடைத்த ஒரு அரிய வெற்றியைக் குறிக்கிறது.
மிலு மான் (எலாபுருஸ் டேவிடியினஸ்) ஓர் அரிய மற்றும் அருகி வரும் இனமாகும்.
பைரே டேவிட் மான் எனவும் அறியப்படும் இவ்வகை மான்கள் 19 ஆம் நூற்றாண்டின்இறுதியில் அழிவின் விளிம்பில் இருந்தன.
மிலு வகை மான்கள், சீனாவின் ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதியைப் பிறப்பிடமாகக் கொண்டவையாகும்.
பொருளாதாரச் செய்திகள்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம்
2020-21 ஆம் ஆண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிகளின் மீதான வட்டி, 'விகிதத்தினை 85% ஆக விதித்து நீதி அமைச்சகம் அங்கீகரித்துள்ளது.
இந்த விகிதமானது 2019-20 ஆம் ஆண்டில் மாற்றப்படாமல் இருந்தது.
தொழிலாளர் வருங்கால வைப்பு றிகியானது PPF மற்றும் சுகண்யா சம்ரிதி ஆகிய கணக்குகளுடன் விலக்கு விலக்கு - விலக்கு என்ற திட்டத்தின் கீழ் முழுவதும் வரி விலக்கு பெற்ற ஒரு நிலையான வருவாய் வசதியாகும்.
சுற்றுச்சூழல் செய்திகள்
உமிழ்வுநிலைப் பட்டியலுக்கு இந்தியா அங்கீகாரம்
. இத்தனை ஆண்டுகளாக வளர்ச்சியடைந்த நாடுகள் (வரவாற்று ரீதியிலான) வெளியிட்ட கார்பன் டை ஆக்சைடு உமிழவினைப் பட்டியலிடுகின்ற இந்தியப் பருவ நிலை நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட ஒரு வவைதளத்திற்கு இந்தியா அதிகாரப் பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.
வளர்ச்சியடைந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளின் உமிழ்வுகளில் உள்ள வேறுபாட்டினை எடுத்துரைக்கும் நோக்கத்துடன் இந்த உமிழ்வுப் பட்டியலானது தயாரிக்கப் பட்டது.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, களடா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் போன்றவை நிகர கார்பன் கடனைக் கொண்டிருப்பதாகக் குறிப்பிடப் படுகின்றன.
இந்தியா மற்றும் சீனா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் நிகர கடனைப் பெற்றுஉள்ளன.
எனவே வளர்ந்து வரும் நாடுகளைவிட உயிழ்வைக் கட்டுப்படுத்துவதற்கான உயரிய இலக்குகளுக்கு வளர்ச்சியடைந்த நாடுகள் உறுதியளிப்பதே நியாயமானது என்று இந்த தரவுத்தளம் குறிப்பிடுகிறது.
குறிப்பு
வருடாந்திர அடிப்படையில் கரியமில வாயு உமிழ்வில் இந்தியா 3வது பெரிய நாடாக உள்ளது. இருப்பினும் அதன் வரலாற்று ரீதியிலான உமிழ்வின் அடிப்படையில் அது 6வது பெரிய உமிழ்வு நாடாகவே உள்ளது. தனது மக்கள் தொகை அளவைக் கருத்தில் கொள்கையில் தனிநபர் உமிழ்வில் இது மிகக் குறைவான அளவையேக் கொண்டுள்ளது.
மாநிலச் செய்திகள்
ஆப்பிள் திருவிழா
மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர மற்றும் நுணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆகியோர் காணொளி வாயிலாக ஆப்பிள் திருவிழாவைத் தொடங்கி வைத்தனர்.
இது ஜம்மு & காஷ்மீரின் ஸ்ரீநகரில் முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 1 மில்லியன் மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான உற்பத்தியோடு ஜம்மு &காஷ்மீரின் ஆப்பிள் உற்பத்தியானது தேசிய உற்பத்தி அளவில் 57% பங்கினை வரிக்கிறது.
சிந்து நதி ஓங்கில் - கணக்கெடுப்பு
பஞ்சாப் மாநிலமானது சிந்து நதி ஓங்கில்களின் கணக்கெடுப்பைத் தொடங்க உள்ளது:
சிந்து நதி ஓங்கிலின் அறிவியல் பெயர் பிளாடானிஸ்தா கேடுஜெட்டிகா மைனர்ஆகும்.
இது பியாஸ் நதியில் காணப்படும் ஒரு நன்னீர் ஓங்கிலாகும்.
இந்தத் திட்டமானது 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். 2019 ஆம் ஆண்டில் இந்து நதி ஓங்கிலானது பஞ்சாபின் மாநில நிர்வாழ் உயிரினமாக அறிவிக்கப் பட்டது.
Read Also :-
Labels :
#DAILY CURRENT AFFAIRS ,
Getting Info...