TNPSC துளிகள்
ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 10 ஆம் தேதி உலக நோய்த்தடுப்புத் தினமாக கொண்டாடப்படுகிறது.
தடுப்பூசி-தடுக்கக்கூடிய நோய்களுக்கு சரியான நேரத்தில் கடுப்பூசிகளைப் பெறுவதன் ஒரு முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்காக வேண்டி இந்த நாள் கொண்டாடப் படுகிறது.
கொல்கத்தாவைச் சேர்ந்த மித்ரபா குஹா இந்தியாவின் 72வது சதுரங்க விளையாட்டு கிராண்ட் மாஸ்டர் ஆனார்.
20 வயதான அவர் செர்பியாவில் நடந்த போட்டியின் போது கிராண்ட்மாஸ்டர் ஆவதற்கான தனது மூன்றாவது மற்றும் இறுதித் தகுதியைப் பெற்றதன் மூலம்.இந்தச் சாதனையைப் புரிந்துள்ளார். இந்தியக் கடற்படையின் அடுத்தத் தளபதியாக வைஸ் அட்மிரல் ஆர் ஹரி குமார் என்பவர் பொறுப்பேற்க உள்ளார்.
தற்போதைய அட்மிரல் கரம்பீர் சிப் நவம்பர் 30 அன்று ஓய்வு பெற்ற பிறகு இவர் அந்தப் பதவியில் பொறுப்பேற்பார்
தமிழ்நாடு செய்திகள்
மதராஸ் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி
மதராஸ் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மேகாலயா மாநில உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். கோவிட் நெறிமுறைகளை மீறியதற்காக இந்தியத் தேர்தல் ஆணையம் கொலைக்.குற்றச் சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு கூறியது இவரது அமர்வு ஆகும்.
நிதிபதி பானர்ஜி 2021 ஆம் ஆண்டு ஜனவரி அன்று மதராஸ் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார்.
செப்டம்பர் 16 ஆம் தேதி நடைபெற்ற உச்ச நீதிமன்றக் கூட்டத்தில் நீதிபதி சஞ்சிப் பானர்ஜியை மேகாலயா மாநில உயர் நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றக் கொலீஜியம் பரிந்துரைத்தது.
அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த முனீஸ்வர் நாத் பண்டாரியை மதராஸ் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றவும் அது பரிந்துரை செய்துள்ளது,
பண வழங்கீட்டு வங்கி உரிமம் – தமிழ்நாடு
பல்வேறு நலத்திட்டங்களில் சரியான பயனாளிகளைச் சென்றடையும் வரை அரசுக்கருவூலத்தில் இருந்து நிதி வழங்கப்படுவதைத் திறம்படக் கண்காணிக்க பண வழங்கீட்டு வங்கி உரிமத்தைப் பெறத் தமிழசு அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டம், சமூக நலத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி வீணாகாமல் மற்றும் தாமதமாகாமல் இருக்க வேண்டி மாநில நிதித் துறையால் மேற்கொள்ளப்படும் பல நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.
தேசியச் செய்திகள்
கல்வித் துறையில் சிறந்த இலட்சிய மாவட்டங்கள்
கல்வித்துறையில் முதல் ஐந்து இலட்சிய மாவட்டங்களை நிதி ஆயோகி அறிவித்து உள்ளது.
செப்டம்பர் மாதத்திற்கான தரவரிசையில் கல்வித் துறையில் மிகவும் முன்னேறிய இலட்சிய மாவட்டங்களை இது தரவரிசைப் படுத்தியுள்ளது.
இதில் தெலுங்கானா மாநிலத்தின் பூபாலப்பள்ளி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
இதில் பூபாலப்பள்ளியைத் தொடர்ந்து,ஜார்க்கண்டில் உள்ள சத்ரா & சாவரிப்கஞ்ச் மாவட்டம்.ஓடிசாவின் நுவாபாடா மாவட்டம் மற்றும் ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டம் ஆகியன் உள்ளன.
ஜன்ஜாதிய கவுரவ் திவாஸ் நவம்பர் 15
பிரசா முண்டாவின் பிறந்தநாளை ஜன்ஜாதிய கவுரவ் திவாஸ்" என்று அறிவிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முண்டா என்றப் பழங்குடியினத்தைச் சேர்ந்த பிர்சா முண்டா 1875 ஆம் ஆண்டு
நவம்பர் 15 ஆம் தேதி பிறந்தார்.
19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது, தற்காலத்தியப் பீகார் மற்றும் ஜார்க்கண்டின் பழங்குடியினப் பகுதி முழுவதும் ஒரு இந்தியப் பழங்குடியினருக்கான சமய இயக்கத்தை அவர் வழி நடத்தினார்,
நாட்டில் அவரது பிறந்தநாள் பிர்சா முண்டா ஜெயந்தியாக கொண்டாடப் படுவதோடு அத்தினம் ஜார்க்கண்ட் மாநில நிறுவன நாளுடன் ஒத்துப்போகிறது.
இஸ்ரேல் - DRDO ஒப்பந்தம்
* இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் இஸ்ரேலின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநரகம் இரண்டும் சமீபத்தில் ஒரு இருதரப்புப் புத்தாக்க ஒப்பந்தத்தில் கையெழத்திட்டன
இந்த ஒப்பந்தமானது இரு நாடுகளின் புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் இரட்டைப் பயன்பாட்டுத் தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்காக புதுமை, விரைவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை மேம்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ரோபாட்டிக்ஸ், ட்ரோன்கள், குவாண்டம் டெக்னாலஜி, செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் அடுத்தத் தலைமுறைத் தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகளை வெளிக் கொணர இரு நாடுகளின் தொழிலகங்கள் மற்றும் புத்தாக்க நிறுவனங்கள் இணைந்து செயல்படும்.
ஹார்பிங்கர் 2021
இந்திய ரிசர்வ் வங்கி தனது முதல் உலகளாவிய ஹேக்கத்தானை HARBINGER 2021 Innovation for Transformation' என்ற பெயரில் நடத்த உள்ளது.
இது டிஜிட்டல் கட்டணத்தில் கவனம் செலுத்துகிறது. இது Sniaiter Digital Paymerits' என்ற கருத்துருவின் கீழ் ஏற்பாடு செய்யப்படும்.
ஐஎன்எஸ் வேலா
ஐஎன்எஸ் வேலா என்ற போர்க் கப்பலானது இரண்டு வருடத்திற்கும் மேற்பட்ட கடற்வழிச் சோதனைகளை அடுத்து இந்தியக் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது நாட்டின் நான்காவது ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கிக் கப்பலாகும்.
ஐஎன்எஸ் வேலா கப்பல் எதிரிகளை எதிர்த்துப் போரிட ரேடார் கருவிகளில் சிக்காத மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் சிறந்த போர் திறன்களைக் கொண்டு இருப்பதாக அறியப்படுகிறது. |டீசவ் - மின்னாற்றல் மூலம் இயங்கும் இந்த நீர்மூழ்கிக் கப்பலானது மும்பையில்
உள்ள மசாகன் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் (Mazagon Dock Ship builders Limited) என்ற நிறுவனத்தின் மூலம் திட்டம் 75 என்பதின் (Project 75) கீழ் கட்டப்பட்டது.
ஐந்தாவதுக் கப்பலான ஐஎன்எஸ் வகிர் ஆனது நவம்பர் 2020 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டு துறைமுகச் சோதனைகளை அது தொடங்கியுள்ளது. இது 2021 ஆம் ஆண்டின் டிசம்பரில் அதன் முதல் மேற்பரப்புக் கண்காணிப்புப் பணியைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது;
ஆறாவது நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் வாகளீர் ஆனது தனது தயாரிப்பின் இறுதி நிலையில் உள்ளது.
மாநிலச் செய்திகள்
திசு வளர்ப்பு அடிப்படையிலான விதை உருளைக்கிழங்கு விதிகள் - பஞ்சாப்
பஞ்சாப் மாநில அமைச்சரவை, 'பஞ்சாப் நிசு வளர்ப்பு அடிப்படையிலான விதை உருளைக் கிழங்கு விதிகள்-2021 என்பதற்கு (Punjab Tissue Culture Based Seed Potato Rules 2021) தனது ஒப்புதலை அளித்தது.
இது பஞ்சாப்பை நிலையான உருளைக்கிழங்கு விதை மையமாக உருவாக்க உள்ளது,
இந்த முடிவின் மூலம், சான்றிதழ் பெற்ற திசு வளர்ப்பு அடிப்படையிலான வசதியைப் பெற்ற முதல் இந்திய மாறிலமாக பஞ்சாப் உருவெடுத்துள்ளது.
இது பஞ்சாபின் ஜவந்தர்-கபுர்தலா பகுதியை உருளைக்கிழங்கு ஏற்றுமதி மையமாக மேம்படுத்தும்.
பஞ்சாப் பழ வளர்ப்பிடச் சட்டம்-1961' என்பதினைத் திருத்துவதன் மூலம் பஞ்சாப் தோட்டக் கலை வளர்ப்பிடம் மசோதா- 2021 என்பதை அறிமுகப்படுத்தவும். அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
கிட்டூர் கர்நாடகா
. மும்பை-கர்நாடகா என்ற பகுதியானது 'கிட்டூர் கர்நாடகா எனப் பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளது.
இந்த மாதத் தொடக்கத்தில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையின்
அறிவிப்பிற்குப் பிறகு இது நடந்தது ஹைதராபாத்-கர்நாடகா என்ற பகுதி ஏற்கனவே 'கல்யாண கர்நாடகா எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பிரபலமானவர்கள், விருதுகள், மற்றும் நிகழ்வுகள்
உள்துறை அமைச்சகத்தின் பத்ம விருதுகள் 2021
பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ள 119 நபர்களின் பட்டியலை உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் இந்த ஆண்டு பத்ம விருதுகள் வழங்கப் பெறுவர்.
"பத்மஸ்ரீ என்பது எந்தவொருத் துறையிலும் சிறப்பான சேவைகளைச் செய்ததற்காக (distinguished service) வழங்கப் படுகிறது.
பத்ம பூஷன் விருதானது ஓர் உயர் வரிசையின் சிறப்பான சேவைக்காக {dstinguished service:of a high order) வழங்கப்படுகிறது;
பத்ம விபூஷன் என்பது ஒரு தனித்துவமான மற்றும் சிறப்பான சேவைக்காக (exceptional and distinguished service) வழங்கப்படுகிறது.
2021 ஆம் ஆண்டில் பாரத ரத்னா விருதானது யாருக்கும் வழங்கப்படவில்லை.
ஃபால்குனி நேயர் - பெண் கோடீஸ்வரர்
னநகா நிறுவனத்தின் (Nykaa) நிறுவனர் ஃபால்குனி நேயர் அவர்கள் இந்தியாவின் சுயச்சார்பான ஒரு பெண் கோடீஸ்வரராக உருவெடுத்துள்ளார்.
இவர் இந்தியாவின் ஏழாவது பெண் கோடீஸ்வரரானார்.
இவர் 2012 ஆம் ஆண்டில் நைகா நிறுவனத்தை நிறுவினார்.
விளையாட்டுச் செய்திகள்
3000 டி20 ரன்கள் - ரோஹித் சர்மா
இந்திய வீரர் ரோஹித் சர்மா டி20 கிரிக்கெட் போட்டியில் 3000 ரன்களை கடந்துள்ளார்.
இந்தச் சாதனையை நிகழ்த்திய உலகின் மூன்றாவது கிரிக்கெட் வீரர் என்ற ஒரு பெருமையை இவர் பெற்றுள்ளார்.
நமீபியாவுக்கு எதிரான ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ரோஹித் 3000 ரன்களை எட்டினார்.
இதில் 3227 ரன்களுடன் விராட் கோலி முதவிடத்தில் உள்ளார்.
அவரைத் தொடர்ந்து நியூசிலாந்தின் மாரட்டின் கப்டில் மற்றும் இந்தியாவின் ரோஹித் சர்மா இதில் உள்ளனர்.
முக்கிய தினங்கள்
அமைதி மற்றும் வளர்ச்சிக்கான உலக அறிவியல் தினம் - 10 நவம்பர்
சமூகத்தில் அறிவியல் வசிக்கும் முக்கியப் பங்கையும், வளர்ந்து வரும் விஞ்ஞானப் பிரச்சனைகள் குறித்த விவாதங்களில் பொதுமக்களை ஈடுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைக்க வேண்டி இந்த நாள் கொண்டாடப்படுகிறது,
2021 ஆம் ஆண்டு என்பது அமைதி மற்றும் வளர்ச்சிக்கான உலக அறிவியல் தினத்தின் 20வது பதிப்பைக் குறிக்கிறது.
இந்த ஆண்டின் அனுசரிப்பானது "காலநிலைக்குத் தயாராக உள்ள சமூகங்களை உருவாக்குதல்" (Building Cimate-Ready Communities) என்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.
2001ஆம் ஆண்டில் உலக அறிவியல் தினம் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பால் (யுனெஸ்கோ) அறிவிக்கப்பட்டது.
இது முதல் முறையாக 2002 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.
இதரச் செய்திகள்
ஆபரேஷன் எக்ஸ்
விடுதலைப் போரின் கதையான ஆபரேஷன் எக்ஸ் என்ற ஒரு புத்தகம் வங்காள மொழியில் வெளியிடப்பட்டது.
ஆபரேஷன் எக்ஸ் இந்தியக் கேப்டன் எம்என்ஆர் சமறத் மற்றும் பிரபல எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் சந்தீப் உன்னிதன் ஆகியோரால் இணைந்து எழுதப்பட்டது.
1971 ஆம் ஆண்டு விடுதலைப் போரின் போது முக்தி பாஹினி (Mukti Bahini) மற்றும் இந்தியக் கடற்படை இணைந்து மேற்கொண்ட கமாண்டோ நடவடிக்கைகள் எவ்வாறு நடந்தன என்பதை இப்புத்தகம் கூறுகிறது
Read Also :-
Labels :
#NOVEMBER DAILY CA ,
Getting Info...