TNPSC -தினசரி நடப்பு நிகழ்வுகள் நவம்பர் 6

TNPSC துளிகள்

 இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட நியமிக்கப்பட்டுளார்.

6 இந்தியாவிற்கான கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கிரிக்கெட் ஆலோசகக் குழுவினால் இவர் நியமிக்கப்பட்டார்,

அமெரிக்க நோய்த் கடுப்பு மையமானது, அமெரிக்காவில் 5 முதல் 11 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பைசர் தடுப்பு மருந்தினைச் செலுத்துவதற்கு அதிகாரப்பூர்வமாக அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமெரிக்காவில் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ள முதல் கோவிட்-19 தடுப்பூசி இதுவாகும்.

ஐம்மு & காஷ்மீர் ஒன்றியப் பிரதேச அரசானது காட்டுக் கோழியினை (Kaj Pheasant) தனது அரசுப் பறவையாக அறிவித்துள்ளது.

 ஹங்குல் (காஷ்மீர் மான்) எனும் விலங்கானது தொடர்ந்து ஐம்மு & காஷ்மீரின் அரசு விலங்காக திகழும். நாசாவின் செவ்வாய்க் கிரக உலாவிக் கலமான பெர்சீவரன்ஸ் சூரிய இணைவின் மறைவிலிருந்து வெளியேறி அந்தச் செங்கோளின் மீது தனது பணியை மீண்டும் தொடங்கியுள்ளது.

சூரிய இணைவு எனப்படும் இந்த இணைவு ஏற்படும் போது புவியிலிருந்துச் செவ்வாய்க்கு அனுப்பப்படும் கட்டளைகள் சூரியனால் சிதைக்கப்படும்.

TNPSC DAILY CURRENT AFFAIRS

தேசியச் செய்திகள்

ஐம்மு & காஷ்மீரில் தீவிரவாத எதிர்ப்பு அமைப்பு


ஐம்மு & காஷ்மீர் அரசானது அப்பகுதியில் தீவிரவாதம் தொடர்பான வழக்குகளின் விசாரணைகளை விரைவாகவும் பயனுள்ள வகையிலும் மேற்கொள்வதற்காகஒரு புதிய மாநிலப் புலனாய்வு முகமையை நிறுவியுள்ளது.

இந்த முகமையானது தேசியப் புலனாய்வு முகமை மற்றும் இதர மத்திய முகமைகளுடன் இணைந்து செயல்படும் ஒரு முதன்மை அமைப்பாக இருக்கும்..

CID பிரிவின் தலைவர் இந்த முகமையின் பதவிசார் இயக்குநராக செயல்படுவார்.

கங்கை வரைபடம்

சுஜேந்திர சிங் சேகாவாதி கங்கை வரைபடம்: கடந்த காலத்தின் நதி" என்பதை வெளியிட்டார்.

இது உத்தரப் பிரதேசத்திலுள்ள கான்பூரின் இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் பேராசிரியர் ராஜிவ் சின்ஹா என்பவரால் உருவாக்கப்பட்டது. இது கடந்த 50 - 60 ஆண்டுகளில் கங்கை நதியில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி ஆவணப் படுத்தச் செய்கிறது.
TNPSC DAILY CURRENT AFFAIRS

பாஷா சங்கம் முன்னெடுப்பு.


மத்தியக் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பள்ளிகளுக்கான பாஷா சங்கம் முன்னெடுப்பு' 'பாஷா சங்கம் செயலி மற்றும் ஏக் பாரத் ஷ்ரேஷ்தா பாரத்' விநாடி வினா செயலி ஆகியவற்றை வெளியிட்டார். 2020 ஆம் ஆண்டு தேசியக் கல்விக் கொள்கையின் செயல்பாட்டு நிரல்களின்படி மாணவர்கள் தங்கள் தாய்மொழியினைத் தவிர்த்து இதர் இந்திய மொழிகளிலும் அடிப்படையானமுன்னெடுப்ப வலமையைப் பெறச்செய்வதே இதன் நோக்கமாகும். இது 'ராஷ்டிரிய ஏக்தா நிவாஸ்' என்ற நிகழ்வின் போது தொடங்கப்பட்டது

TNPSC DAILY CURRENT AFFAIRS

சர்வதேசச் செய்திகள்

உலகளாவிய மீத்தேன் உறுதிமொழி

உலகளாவிய மீத்தேன் உறுதிமொழியானது ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் 26வது பங்குதாரர்கள் பருவநிலை மாநாட்டின் போது வெளியிடப் பட்டது.

இந்த உறுதிமொழியானது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இணைந்து மேற்கொண்ட ஒரு முயற்சியாகும்.

இந்த உறுதிமொழியானது மீத்தேன் உமிழ்வின் அளவினை 2020 ஆம் ஆண்டு அளவை விட 2030 ஆம் ஆண்டுக்குள் 309% வரை குறைக்கும் நோக்கத்துடன் அறிவிக்கப் பட்டு உள்ளது.

இந்த உறுதிமொழியானது வளிமண்டலத்தில் மீத்தேன் 2வநு மிகுதியான பசுமை இல்ல வாயுவாகத் திகழ்வதால் மிகவும் முக்கியமானதாகும்.

ஒரு சூரியன், ஓர் உலகம், ஒரு கட்டமைப்பு
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரிட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் இணைந்து ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 26வது பங்குதாரர்கள் பருவநிலை மாநாட்டில் 'ஒரு சூரியன், ஓர் உலகம், ஒரு கட்டமைப்பு" என்ற முன்னெடுப்பினைத் தொடங்கி உள்ளனர்.

இந்தத் திட்டமானது படலகம் முழுவதும் சூரிய ஆற்றலை விறியோகிப்பதற்காக "நாடுகளுக்கிடையேயான தேசிய மின்சாரக் கட்டமைப்பினை அமைப்பதற்கு என்று

உருவாக்கப் பட்டதாகும். இந்தத் திட்டத்தின் பின்னணியிலுள்ள நோக்கமானது "The Sun Never Sets" என்பதாகும். .

சூரிய ஒளி ஆற்றலின் சவால்களைச் சமாளிப்பதில் இந்த திட்டமானது பயன்படுத்தப் படும்.கிளாஸ்கோ நகரில் வினிஷா உமாசங்கர்

* தமிழ்நாட்டைச் சேர்ந்த வினிஷா டமாசங்கர் சமீபத்தில் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 26வது ஐ.நா. பருவநிலை மாற்றப் பங்குதாரர்கள் மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்றச் சந்திப்பில் தாய ஆற்றல் பற்றி பேசினார்.

இந்தச் சந்திப்பானது தூய தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு பற்றி விவாதித்தது, பருவநிலை மாற்றத்தைச் சமாளிப்பது குறித்த நடவடிக்கையில் பேசுவதை நிறுத்தி விட்டு உடனடியாகச் செயல்பட தொடங்குமாறு அவர் உலகத் தலைவர்கள், வர்த்தக தலைவர்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகளை வலியுறுத்தினார்.

வெற்று வாக்குறுதிகளை அளித்து அவற்றை நிறைவேற்றத் தவறிய தலைவர்கள் மீது இளைஞர்கள் கோபமும் விரக்தியும் அடைவதற்கு அனைத்துக் காரணங்களும் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

டெசர்ட் வாரியர் பயிற்சி

டெசர்ட் வாரியர் என்பது இந்தியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு இடையேயான ஒரு இருதரப்பு இராணுவப் பயிற்சியாகும்.

இது அந்த நாடுகளின் விமானப்படைகளுக்கிடையே நடத்தப் பெறும் பயிற்சி ஆகும்.

இது எகிப்து நாட்டிலுள்ள எல் பெரிகாட் வான்படைத் தளத்தில் நடத்தப் பட்டது.உபரி ஆற்றலை விற்பனை செய்யும் நேபாளம்
நேபாள அரசு உபரி மின்சாரத்தை இந்தியச் சந்தையில் விற்பனை செய்ய இந்தியா அனுமதி வழங்கியுள்ளது.

நேபாளத்திடமிருந்து இந்தியா மின்சாரம் வாங்குவது இதுவே முதல்முறையாகும். 32.MW திறன் மின்சாரத்தினை இந்திய ஆற்றல் பரிமாற்ற நிறுவனத்திடம் விற்பனை

செய்வதற்கு மத்திய மின்சார ஆணையமானது நேபாளத்திற்கு அனுமதி வழங்கியது.

இவை 24 MW நிரிகுலி நீர்மின் நிலையம் மற்றும் 15 MW வேதிகாட் நீர்மின் நிலையம் ஆகியவற்றில் உற்பத்தி செய்யப்படும் அந்த இரண்டு நீர்மின் நிலையங்களும் இந்தியாவின் உதவியுடன் உருவாக்கப்பட்டன.

TNPSC DAILY CURRENT AFFAIRS
பொருளாதாரச் செய்திகள்

பந்தன் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கியானது தற்போது அரசு வணிகத்தை நடத்துவதற்கு என்று பந்தன் வங்கியை தனது முகமை வங்கியாக நியமித்துள்ளது.

பந்தன் வங்கியானது இந்திய ரிசர்வ் வங்கியின் முகமை வங்கியாக நியமிக்கப் பட்டு உள்ள மற்ற தனியார் வங்கிகளுடன் இணைந்துள்ளது. GST. VAT மற்றும் மாநில வரி வசூல் தொடர்பான பரிவர்த்தனைகளை கையாள்வதற்கு பந்தன் வங்கிக்கு தற்போது அங்கீகாரம் வழங்கப்படும்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பச்செய்திகள்

குவாங்மு

சீன நாடானது குவாங்மு எனப்படும் ஒரு புவிஅறிவியல் செயற்கைக் கோளினை விண்ணில் ஏவியுள்ளது.

இது வடக்கு சான்ஷி மாகாணத்தில் உள்ள தாயூவான் எனும் செயற்கைக்கோள் ஏவுகள் மையத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது;

 * லாங்க் மார்ச்-6 தாங்கி எனும் ராக்கெட் மூலம் விண்ணிற்கு ஏவப்பட்ட செயற்கைக் கோளானது அதன் திட்டமிடப்பட்ட சுற்று வட்டப்பாதையில் நுழைந்துள்ளது.
இது நிலையான மேம்பாட்டிற்காக ஐ.நா விடுத்த 2030 செயல்பாட்டு நீரலைப் பாத்தி செய்வதற்கான உலகின் முதலாவது விண்வெளி அறிவியல் செயற்கைக்கோளாகும்.

மாநிலச் செய்திகள்

ஜனசேவகா திட்டம்.

ஜனசேவகா திட்டமானது. கர்நாடக அரசினால் தொடங்கப்பட்டது. இத்திட்டமானது மாநில அரசின் 56 சேவைகளை மக்களின் வீடு தேடி வழங்குவதை நோக்கமாகக் கொண்டதாகும்.

இத்திட்டத்தில் கீழ் சொத்துச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் 
விதவை மற்றும் ஓய்வூதியப் பயன்கள் போன்ற பல சேவைகள் வீடு தேடி வழங்கப்படும்.

Janasevaka Scheme in Karnataka Doorstep Delivery of Govt Scheme GOVERNMENT SERVICES

பெரிய அளவிலான மாலிக் அன்ஹைட்ரைடு ஆலை

அரசிற்குச் சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனமானது ஹரியானாலிலுள்ள தனது பானிபட் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பெட்ரோலிய வளாகத்தில் இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு பெரிய அளவிலான மாலிக் அன்ஹைட்ரைடு ஆலையினை (Maleic Anhydride:Fiant) நிறுவ உள்ளது.

இது மதிப்புக் கூட்டப்பட்ட வேதிப் பொருட்களை தயாரிப்பதற்கான ஆலையாகும்.

இந்த ஆலையானது ஆண்டுக்கு 1,20,000 டன்கள் அளவில்மாலிக் அன்ஹைட்ரைடை உற்பத்தி செய்யும் வகையில் நிறுவப்பட உள்ளது.

பாலியஸ்டர் ரெசின்கள் மற்றும் மேற்பரப்புப் பூச்சுகளுக்கான பிளாஸ்டிசைசர்ஸ், வேளாண் வேதிப் பொருட்கள் மற்றும் உயவுப் பொருட்கள் போன்ற சிறப்புத் தயாரிப்புகளைத் தயாரிக்க இது பயன்படுத்தப்படும்.

பிரபலமானவர்கள், விருதுகள், மற்றும் நிகழ்வுகள்

கின்னஸ் புத்தகம் - லெப்டினட் கர்னல் பாரத் பன்னு

லெப்டினட் கரனல் பாரத் பன்னு குஜராத் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரையில் நாடு முழுவதும் சைக்கிள் ஓட்டி தனது 3வது இன்னஸ் உலக சாதனையைப் படைத்து உள்ளார்.

இவர் 9 நாட்கள், ஏழு மணி நேரம் மற்றும் 5 நிமிடத்தில் 3800 கி.மீ தொலைவைக் கடந்தார்,

1971 ஆம் ஆண்டு வங்காள தேச விடுதலைப் போராட்டத்தின் 50 ஆம் ஆண்டின் நினைவிற்கான அனுசரிப்பின் ஒரு பகுதியாக இவர் இந்த முயற்சியை மேற்கொண்டு உள்ளர். 
அந்த நிகழ்வின் போது உயிர்த் தியாகம் செய்த இராணுவ வீரர்களைக் கௌரவிக்கும்  வகையில் அந்த நிகழ்வு 'ஸ்வர்னிம் விஜய் வர்ஷ்" என அனுசரிக்கப்படுகிறது.

TNPSC DAILY CURRENT AFFAIRS

இதரச் செய்திகள்

மகாத்மா காந்தி நாணயம்
 இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர் மகாத்மா காந்தியின் வாழ்க்கை மற்றும் மரபினைக் கொண்டாடுவதற்காக வேண்டி ஒரு நினைவு நாணயத்தை பிரிட்டன் அரசு வெளியிட்டுள்ளது.

இந்தச் சிறப்பு நாணயமானது தங்கம் மற்றும் வெள்ளிகளில் கிடைக்கிறது. இது இந்தியாவின் தேசிய மலரான தாமரையின் படத்தையும், காந்தியின் பிரபலமான மேற்கோள்களில் ஒன்றான "என் வாழ்க்கையே எனது செய்தி" என்பதையும் கொண்டுள்ளது.

Read Also :-
Labels : #NOVEMBER DAILY CA ,
Getting Info...

إرسال تعليق