Posts

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும்குரூப்-2 பணிகளுக்கு நேர்முகத் தேர்வை நீக்க அரசு முடிவு

TNPSC GROUP1 ,TNPSC GROUP 2 2A,TNPSC GROUP 4,TNPSC GROUP 2 UNIT 8 NOTES,TNPSC GROUP 4 TAMIL NOTES
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 பணிகளுக்கு நேர்முகத் தேர்வை நீக்க அரசு முடிவு
தமிழகத்தில் அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் ஊழியர்களும், அலுவலர்களும் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்காக குரூப்-1, குரூப்-2 குரூப்-2-ஏ, குரூப்-4 என பல்வேறு நிலை களில் போட்டித் தேர்வுகள் நடத்தப் படுகின்றன. குரூப்-4 பணிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. ஆனால், குரூப்-1, குரூப்-2 நிலையிலான பணிகளுக்கு எழுத்துத் தேர்வுடன், நேர்முகத் தேர்வும் நடைபெறும். நேர்முகத் தேர்வு கொண்ட குரூப்-2 தேர்வின்கீழ் நகராட்சி ஆணையர், துணை வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர், சிறைத் துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ), உள் ளாட்சி தணிக்கை உதவி ஆய்வா ளர், கூட்டுறவு சங்கங்களின் முது நிலைஆய்வாளர்,கைத்தறிஆய்வா ளர், வருவாய் உதவியாளர், பேரூ ராட்சி செயல் அலுவலர் உட்பட பல்வேறு பதவிகள் வருகின்றன.

அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர், நேர்முக எழுத்தர் போன்ற பணியிடங்கள் குரூப்-2-ஏ தேர்வு மூலமாக நிரப்பப்படுகின்றன. மத்திய அரசுப் பணிகளில் குரூப்-பி பணிகளுக்கு முன்பு
நேர்முகத் தேர்வு இருந்தநிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு நேர்முகத் தேர்வு நீக்கப்பட்டது. தற்போது குரூப்-பி பணிகளுக்கு எழுத்துத் தேர்வு மட்டுமே நடத்தப் படுகிறது. ரயில்வே தேர்வு வாரிய மும் குரூப்-பி பதவிகளுக்கு தற் போது நேர்முகத் தேர்வு இல்லா மல், எழுத்துத் தேர்வு மதிப் பெண் அடிப்படையிலேயே பணி நியமனங்களை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தமிழக அரசும் பெரும்பாலான குரூப்-2 பணி களுக்கு நேர்முகத் தேர்வை நீக்க முடிவு செய்துள்ளது. குரூப்-2 பணிகளில் குறிப்பிட்ட ஊதிய விகி தத்துக்கு மேல் உள்ள பதவிக ளுக்கு மட்டும் நேர்முகத் தேர்வு நடத்தவும், எஞ்சிய பெரும்பாலான பணிகளுக்கு நேர்முகத் தேர்வை நீக்கவும் முடிவு செய்திருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேர்முகத் தேர்வு நீக்கப்படும் குரூப்-2 பணிகள், குரூப்-2-ஏ தேர் வின் கீழ் கொண்டுவரப்படும் தெரி கிறது. தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டு றவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் (கிரேடு-2) உள்ளிட்ட பதவிகள் நேர்முகத் தேர்வு நீக்கப்படும் பதவிகளின் பட்டியலில் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.

Read Also :-
Labels :
Getting Info...

3 comments

  1. Hii
    1. Hello
  2. Hii