போட்டித்தேர்வு மற்றும் வேலைவாய்பில் வன்னியர் 10.5% இட ஒதுக்கீடு ரத்து

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. வன்னியர்களுக்கு சதவீத10.5  இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணையை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. முறையான சாதிவாரி கணக்கெடுப்பு இல்லாமல் சாதிவாரி இட ஒதுக்கீடு வழங்க முடியுமா எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளது. வன்னியர்களுக்கு சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணை ஆனது அரசியலமைப்பிற்கு முரணானது என்றும் நீதிபதிகள் கருத்து.


இந்த அரசாணை ஆனது முன்னாள் ஆளும் கட்சியான அதிமுக அரசால் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கினை துரைசாமி மற்றும் முரளி சங்கர் ஆகியோர் உள்ளடக்கிய அமர்வு விசாரித்தது
ஏற்கனவே 20% மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் 10.5% வன்னியர்களுக்கும் DNC என அழைக்கப்படும் பிரிவினருக்கு 7.5% மற்ற இதர பிரிவினருக்கு 2% வழங்கப்படும் என பிரித்து வழங்கப்பட்டிருந்தது இதனை எதிர்த்து பலதரப்பட்ட வகுப்பினரும் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர்
இதனை விசாரித்த துரைசாமி மற்றும் முரளி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு 10.5% இட ஒதுக்கீடு அனைத்து அரசியலமைப்பிற்கு முரணானது என அறிவித்து அந்த அரசாணையை ரத்து செய்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!