கலாச்சாரம்:
*வாலாஜாபாத் அருகே 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சதி கற்கள் கண்டுபிடிப்பு உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் தகவல்
* காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டத்தில் உள்ள உள்ளாவூர் கிராமத்தில், 16-ம் நூற்றாண்டைச் டச் சேர்ந்த விஜயநகர மன்னர்கள் காலத்தை சேர்ந்த 4 சதி கற்களும், உடைந்த நிலையில் ஒரு சிலையும் உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் மூன்று சதி கற்களில் ஒரு பெண், ஓர் ஆண் உருவமும், 4-வது சதிகல்வில் ஓர் ஆண், மூன்று பெண் உருவங்களும் உள்ளன. இறந்தவர்கள்
நினைவைப் போற்றும் வகையில் அவர்கள் உருவம் பொதித்த கற்களை
உருவாக்கி ஊர் பொது வெளியில் நட்டு வைத்து வழிபாடு நடத்துவர்.
(Daily current affairs)
* நாங்கள் கண்டறிந்த இந்த சதி கற்களில், 3 சதி கற்களில் கணவன் மனைவியும், ஒரு சதிக்கல்லில் ஒரு கணவன் 3 மனைவிமார்களும் உள்ளனர். தீயில் பாய்ந்து உயிரை விட்ட இந்தப் பெண்களின் நினைவைப் போற்றும் வகையில் தீப்பாஞ்சி அம்மனாக வழிபட்டுள்ளனர்.
நியமனங்கள்
மீன்வளர்ச்சிக் கழகத் தலைவராக ந.கௌதமன் நியமனம்
* தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக ந.மௌதமனை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாவின் உத்தரவிட்டுள்ளார். அவர் நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவர் கிராமத்தில் பிறந்தவர். கடந்த 25 ஆண்டுகளாக மீனவ கிராமங்களில் ஏற்படும் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு கண்டவர்.
பொருளாதாரம்
புதிய பொருளாதார கொள்கை மற்றும் அரசுத்துறை ஜிஎஸ்டி இழப்பீடு: மாநிலங்களுக்கு ரூ44,000 கோடி விடுவிப்பு
Daily current affairs)
* (ஜிஎஸ்டி) அமலாக்கத்தின் காரணமாக ஏற்படும் இழப்பீடுகளுக்கு ரூ44,000 கோடியை மூன்றாவது தவணையாக மாநிலங்களுக்கும், யூனியன் பிரதோங்களுக்கும் மத்திய நிதியமைச்சகம் விடுவித்தது. தமிழகத்துக்கு ரூ.2,240 கோடிவிடுவிக்கப்பட்டுள்ளது.
* ஜிஎஸ்டி இழப்பீட்டுக்கு வெளிச்சந்தை பத்திரங்கள் மூலம் கடனாகப் பெற்று இந்த நிதியை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்குகிறது. கடந்த 2021, மே 28-ஆம் தேதி நடைபெற்ற43-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் உள்ள நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க 2021-22 நிதியாண்டுக்கு கூடுதலாக ரூ.1.59 லட்சம் கோடியை கடனாகப் பெற்றுத் தர முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, இந்த ரூ.1.59 லட்சம் கோடியில் மத்திய அரசு முதல் தவணையாக ரூ.75,000 கோடியை கடந்த ஜூலை 15-ஆம் தேதியும், இரண்டாம் தவணையை ரூ,40,000 கோடியை கடந்த அக்டோபர் 7-ஆம் தேதியும் விடுவித்தது.
Daily current affairs)
சரக்கு மற்றும் சேவை வரி (GST)
*
இது ஒரு மறைமுக வரியாகும்.
*
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 101வது திருத்தச் சட்டத்தின் கீழ் 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டது.
•
இதன் தலைவர் - ஒன்றிய நிதியமைச்சர்,
* O%, 5%, 12%, 8%, 28% விகிதங்களில் இவ்வரி விதிக்கப்படுகிறது. தங்கம் மீது 3% வரி விதிக்கப்படுகிறது.
இந்தியாவில் தங்கத்தின் தேவை மீண்டும் அதிகரிப்பு:
டபிள்யூஜிசி
(TNPSC )
* இந்தியாவில் தங்கத்தின் 47% தேவை மீண்டும் அதிகரித்து வருவதாக உலக தங்க கவுன்சில்
(டபிள்யூஜிசி) தெரிவித்துள்ளது.
• பொருளாதார நடவடிக்கைகள் குடுபிடிப்பு மற்றும் நுகர்வோரிடையே தேவை அதிகரித்து வருவது ஆகியவற்றின் காரணமாக நடப்பாண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் தேவை. அதிகரித்து 139,1L ளை எட்டியது.
கடந்த 2020 செப்டம்பர் காலாண்டில் இதற்கான தேவை 946 டன்னாக மட்டுமே காணப்பட்டது
. உலக தங்க கவுன்சில்
தலைவர்- கெல்வின் டஷ்னிங்கி
* தலைமையகம் - லண்டன்
தொடக்கம் 1987
தினசரி தேசிய நிகழ்வு
சென்னை வெள்ளத் தடுப்புத் திட்டங்களுக்கு ரூ.1877 கோடி கடன்: இந்தியா-ஆசிய வளர்ச்சி வங்கி இடையே ஒப்பந்தம்
* சென்னையில் வெள்ளக்கடுப்பு மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.1,877 கோடி (251 மில்லியன் டாலர்) கடனுதவி வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் ஆசிய வளர்ச்சி வங்கியும் கையொப்பமிட்டன. • சென்னை நகரில் வெள்ள பாதிப்பு ஏற்படுவதில் இருந்து கடுப்பதற்காக, கொசஸ்தலை
ஆறுபாயும் பகுதிகளில் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படவுள்ளன. இந்த திட்டப் பணிகளுக்கு ரூ.1877 கோடி கடனுதவி வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும், ஆசிய வளர்ச்சி வங்கியும் கையொப்பமாகியுள்ளன.
* இந்த ஒப்பந்தத்தில் பொருளாதார விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலர் ரஜக்குமார் மிஸ்ராவும் ஆசிய வளர்ச்சி வங்கியின் இந்திய திட்ட இயக்குநர் டேக்கியோ கோஷினியும் கையொப்பமிட்டனர்.
ஆசிய வளர்ச்சி வங்கி (Adilan Devikoment Bank)
துவக்கம். 1966
தலைமையிடம் - Mandaluryong, Mania, Philppihnes
உறுப்பினர்கள் - 64 நாடுகள் உறுபிறைகள் !
* தலைவர் - மாட்சுகு அசகாவா (ஜப்பான்)
'பயோ' பாதுகாப்பு அவசியம் யொ பாறுகாப்பு:
அபாயகரமான நோய்க்கிருமிகளை வேண்டுமென்றே ஆயுதமாக்குவது
பெரும் கவலையளிப்பதாக கூறிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், இதைத் தடுக்க இந்தியாவில் உயிரி (பயோ) பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்றார்.
* பேரிடர் மற்றும் பெருந்தொற்று காலங்களில் தேசிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை
நடவடிக்கை என்ற தலைப்பில் புணேயில் நடைபெற்ற கருத்தரங்களில் அவர் பங்கேற்றார்.
சர்வதேச நிகழ்வு
ஃபேஸ்புக் நிறுவனத்தின் பெயர் 'மெட்டா' என மாற்றம் ஃபேஸ்யுக் நிறுவனத்தின் பெயர் மெட்டா' என மாற்றப்படுவதாக அதன் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜுக்கர் பெர்க் தெரிவித்துள்ளார்.
* சமூக ஊடகம் என்பதைத் தாண்டி மெட்டாவெர்ஸ்' எனும் மெய்நிகர் உலகத்தை
உருவாக்குவதில் ஃபேஸ்புக் நிறுவனம் தீவிரம்காட்டி வருகிறது. அதற்கு வசதியாகநிறுவனத்தின் பெயர் 'ஃபேஸ்புக் இன் கார்ப்பரேட்டட்' என்பதிலிருந்து மேட்டா எனமாற்றப்படுகிறது.
தமிழ்நாடு
வனப் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா; தமிழில் வெளியீடு
* மத்திய அரசின் வனப் பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதா தமிழக வனத்துறையின்
இணையதளத்தில் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது.
* மத்திய அரசு சார்பில் கடந்த 1980-ஆம் ஆண்டு வனப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத் இந்தச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான பணிகளில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அளமச்சகம் ஈடுபட்டு வருகிறது. இதற்கான முன்வடிவை கடந்த அக்டோபர் 4இல் அரசு வெளியிட்டது. இதுதொடர்பான கருத்துகளை 15 நாள்களுக்குள் fca.amendmersggpvin என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத் திருத்தத்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக வனத் துறையின் இணையதளமான www.forests.tn.gov.in-இல் இந்த சட்டத் திருத்த மசோதா தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிட்பட்டுள்ளது
இலங்கைத் தமிழர் நலனுக்கான ஆலோசனைக்குழு
* இலங்கைத் தமிழர் நலனுக்கான ஆலோசனைக்குழு, அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. • முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பான மேம்படுத்தப்பட்ட வாழ்வை மேற்கொள்ள ஏதுவாக, பணக்கோடை, இலவச துணிமணிகளுக்கான நிதி, பாத்திரங்களுக்கான நிதி, கல்வி தவித்தொகை, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி, சமுதாய முதலீட்டு நிதியை உயர்த்தி வழங்குதல், முதல் முறையாக இலவச சமையல் எரிவாயு அரிசி மானிய விலை தள்ளுபடி, குடியிருப்பதற்கு புதிய வீடுகள் கட்டுதல் மற்றும் பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் போன்ற திட்டங்களைச் செயல்படுத்துவது தொடர்பான அறிவிப்பு முதல்வரால் சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டது.
* இந்தக் குழுவின் தலைவராக சிறுபான்மை மற்றும் தமிழகத்துக்கு வெளியில் வாழும் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளார்.
துணைத்தலைவராக மக்களவை உறுப்பினர் கணநிதி வீராசாமி, உறுப்பினர்களாகசட்டப்பேரவை உறுப்பினர் எ.தமிழரசி, பொது-மறுவாழ்வுத்துறை செயலர் ஆகியோரும், உறுப்பினர் செயலராக மறுவாழ்வுத்துறை இயக்குநரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவ சேவைகளை ஆக்கபூர்வமாக அளிப்பதில் தமிழகம் முதலிடம்
•
மருத்துவ சேவைகள் உரிய பயனாளிகளை சென்றடையும் மாநிலங்கள் பட்டியலில்
தமிழகம் முதலிடத்தில் உள்ளது. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகம் வெளியீட்டுள்ள ஆய்வரிக்கையில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது.
* சுகாதார சேவைகளைப் பொருத்தவரை, மருத்துவக் காப்பீடு, மகப்பேறு சேவைகள், பிரசவம், குழந்தைகளுக்கான தடுப்பூசி மற்றும் அரசு மருத்துவமனைகளின் படுக்கை வசதி போன்ற விவரங்கள் தேசிய அளவில் ஒப்பீடு செய்யப்பட்டன.
தமிழகத்தில் மேலும் 600 எம்பிபிஎஸ் இடங்களுக்கு அனுமதி
* தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் வரும் மருத்துவக் கல்லூரிகளில் மேலும் 600 இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதன் மூலம் நிகழாண்டில் 2,100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
* தமிழகத்தில் கட்டப்பட்டு வரும் 11 மருத்துவக் கல்லூரிகளிலும் நிகழாண்டிலேயே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்பதற்கான முயற்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக மேற்கொண்டு வந்தார்.
• இதன் காரணமாக ஏற்கெனவே 850 இடங்களுக்கு ஒப்புதல் கிடைத்தது. அனைத்துக் கல்லூரிகளிலும் 150 இடங்கள் வீதம் மொத்தம் 1550 இடங்கள் கிடைக்க வேண்டும் என்று தாங்கள் கோரிக்கை விடுத்து அதற்கான நடவடிக்கை எடுத்தோம்.
* தற்போது கிருஷ்ணகிரி, திண்டுக்கல், அரியலூௗர், நாகப்பட்டினம் மருத்துவக் கல்லூரி களில்
150 இடங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
• இதன் வாயிலாக நிகழாண்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1450
இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி கிடைத்துள்ளது.
* இதனுடன் கோவை மருத்துவக் கல்லூரியில் ஏற்கெனவே 150 இடங்களுடன் கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு இசைவளிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்.
• தமிழகத்தில் ஏற்கெனவே உள்ள 26 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,750 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அதேபோன்று 15 சுயநிதிக் கல்லூரிகளில் 2,350 இடங்களும், 9. நிகர்நிலை கல்வி நிறுவனங்களில் 1,550 இடங்களும் உள்ளன.
இந்நிலையில், தமிழகத்தில் புதிதாகத் தொடங்கப்படும் 11 ஈரசு மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 1450 இடங்களையும் சேர்த்தால் மொத்தம் 9,100 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ள பெருமைக்குரிய மாநிலமாக நாம் திகழ்கிறோம். ஏறத்தாழ இந்தியாவிலேயே அதிக எம்பிபிஎஸ் இடங்கள் கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.
இல்லம் தேடி கல்வி மூலம் அரசுப் பள்ளிகளில் 1 லட்சம் கூடுதல் மாணவர் சேர்க்கை
* இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் மூலம், குழந்தைகளின் பள்ளி வருகை உறுதி செய்யப்படும் என்று முதல்வர் முகஸ்டாவின் உறுதி அளித்துள்ளார். இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வயர்களாக இணைத்துக் கொள்ள இதுவரை 67 ஆயிரத்து 961 பெண்களும், 18 ஆயிரத்து 557 ஆண்களும், 32 திருநங்கைகளும் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்தோரின் கல்வித் தகுதி இருப்பிடம், முன் அனுபலம் போன்ற பல்வேறு அளவீடுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் நேரடியாகத் தேர்வு செய்யப்படுவர். இந்தப் பள்ளி மேலாண்மைக் குழுவில் பள்ளித் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர். உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம்பெறுவர், தேர்ந்தெடுக்கப்படும் தன்னார்வயர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
Daily current affairs)
* புதிய கல்விக் கொள்கை:
மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்பது ஏற்கெனவே பலமுறை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், மாநில அளவிலான கல்விக்கொள்கையை: வகுத்திட கல்வியாளர் அடங்கிய குழு விரைவில் அமைக்கப்படும்.
பொது அறிவு
•
பள்ளிக் சுல்வி தரக் குறியீட்டில் ஒட்டுமொத்த செயல்திறன் பட்டியலில் 20 பெரிய மாநிலங்களில் தமிழகம் (734%) 2-வது இடம் வகிக்கிறது. முதல் இடத்தில் கேரளா (766%) கடைசி இடத்தில் உத்தர பிரதேசம் (364%) உள்ளன என்று நிதி ஆயோக் அமைப்பு தெரிவித்துள்ளது
TNPSC Daily current affairs)