வரலாறு
பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம்
• ஏவுகணை சோதனைக்கு வான் இலக்காக பயன்படும் விமானம் வெற்றிகர சோதனை * பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) சார்பில் உருவாக்கப்பட்ட அதிவேக சப்யாஸ்' இலக்கு விமானம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. வான் இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளின் சோதனையின்போது இலக்காக இந்த விமானம் பயன்படுத்தப்படும்.
• ஓடிஸா மாநிலம், சண்டிபூர் அருகே வங்காள விரிகுடா கடல் பகுதியில் டிஆர்டிஓ-வின் ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனைத் தளத்தில் (ஐடிஆர்) இந்த இயக்கு விமானத்தின் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்யாஸ் சோதனைவெற்றி பெற்றதைத் தொடர்ந்து டிஆர்டிடு அதிகாரிகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வாழ்த்து தெரிவித்தார். உலக அமைப்புகள் - உடன்படிக்கைகள் மற்றும் மாநாடுகள்நீர்மூழ்கிக் கப்பலைத் தாக்கும் ஏவுகணைகள்: அமெரிக்காவுடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்
* அமெரிக்காவிடம் இருந்து ரூ.423 கோடி செலவில் எம்.கே.-54 ரக நீர்மூழ்கிக் கப்பலைத்தாக்கும் ஏவுகணைகளை இந்தியா கொள்முதல் செய்கிறது. இதுதொடர்பான ஒப்பந்தத்தில்பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது. இந்த தகவலை பாதுகாப்பு அமைச்சக செய்தித்தொடர்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
* இந்த ஏவுகணைகள், இந்திய கடற்படையில் உள்ள பி-61 ராகண்காணிப்பு விமானத்தில் பயன்படுத்தக்கூடியவை. இவை நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் திறன்கொண்டவை. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா-பிரிட்டன் ஒப்புதல்
* இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவும் பிரிட்டனும் ஒப்புக்கொண்டுள்ளன.
* இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் எலிசபெத் மரஸ் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இடையேயான பேச்சுவார்த்தையின்போது இதற்கான உடன்பாடு ஏற்பட்டது. ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தையின்போது ஆலோசிக்கப்பட்டது.
சிறந்த நபர்கள்
இருதய நிபுணர் கே.ஏ.ஆப்ரஹாம் மரணம் • பத்மஸ்ரீ விருது பெற்ற ஆப்ரஹாம் அவர்கள் 1970 (இந்தியா-பாகிஸ்தான்) போரின்போது
இந்திய இராணுவத்தில் பணியாற்றினார்.
அறிவியல்
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள்
• இந்தியா உள்ளிட்ட நாடுகள் 'ஹைப்பர்சானிக்' ஏவுகணைகளைத் தயாரிக்கின்றன * இந்தியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் 'ஹைப்பர்சானிக்' ஏவுகணைகளைத் தயாரித்து வருவதாக அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வு சேவைகள் குழுவின் அக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2/6
* ஒலியின் வேகத்தைவிட 5 மடங்கு வேகத்தில் பறக்கக் கூடிய ஏவுகணைகள் 'ஹைப்பர்சானிக்' என அழைக்கப்படுகின்றன. சீனா அத்தகைய ஏவுகணையைப் பரிசோதனை செய்ததாகவும் இலக்கைத் தாக்காமல் பூமியை சுந்த ஏவுகணை சுற்றியதாகவும் அண்மையில் செய்திகள் வெளியாகின.
* அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வு சேவைகள் குழு இது தொடர்பான அறிக்கையை வெளியீட்டுள்ளது. அதில், 'அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள் நவீன தொழில்நுட்பத்திலான ஹைப்பர்சானிக் ஏவுகணைகளைக் கொண்டுள்ளன. அதே வேளையில், ஆஸ்திரேலியா, இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளும் ஹைப்பர்சானிக் தொழில்நுட்பத்திலான ஏவுகணைகளைத் தயாரித்து வருகின்றன.
• இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலியா அமெரிக்காவுடனும், இந்தியா ரஷியாவுடனும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. ஒலியைவிட 7 மடங்கு வேகத்தில் இயங்கும் பிரமோஸ்-2 ஏவுகணையை ரஷியாவுடன் இணைந்து இந்தியா தயாரிந்து வருகிறது, அந்த ஏவுகணையை 2017-ஆம் ஆண்டிலேயே செயல்பாட்டுக்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டிருந்தது.
* ஆனால், தாமதத்தின் காரணமாக 2025-2028-ஆம் ஆண்டுகளுக்குள் அந்த ஏவுகணை செயல்பாட்டுக்கு வரும் என்று செய்தி அறிக்கைகள் வாயிலாகத் தெரியவந்துள்ளது. ஹைப்பர்சானிக் தொழில்நுட்பத் திட்டத்தின் கீழ் இந்தியா தாமாகத் தாக்குதல் ஏவுகணைகளைத் தயாரித்து வருகிறது. ஒலியைவிட 6 மடங்கு வேகத்தில் இயங்கும் இயந்திரத்தை (ஸ்க்ரேம்ஜெட்) கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூனிலும் 2020-ஆம் ஆண்டு செப்டம்பரிலும் இந்தியா சோதனை செய்தது.
ஒலியைவிட 13 மடங்கு அதிகவேகம் வரை பரிசோதனை செய்யும் திறன் இந்தியாவிடம் உள்ளது.
* இந்தியாவைப் போல பிரான்ஸும் ரஷியாவுடன் இணைந்து ஹைப்பர்சானிக் ஏவுகணைகளைத் தயாரித்து வருகிறது.
தினசரி தேசிய நிகழ்வு
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் அடுத்த மாதம் தொடக்கம்
* நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர். நவம்பர் மாதத்தின் நான்காவது வாரத்தில்தொடங்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
• நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை நவம்பர் 29-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, அதிகாரபூர்வ முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
பிரதமருடன் உலக வர்த்தக அமைப்பின் தலைவர் சந்திப்பு
பிரதமர் நரேந்திர மோடியை உலக வர்த்தக அமைப்பின் (டபிள்யூடிஓ) தலைவர் நிகோஸிஒக்காஞ்சோ இவெயல்லா சந்தித்தார்.
• டபிள்யூடிடு தலைவர் நிகோஸி ஒக்காஞ்சோ, இவெயல்லா 3 நாள் பயணமாக இந்தியா வந்தார். அவர் தில்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். அவர்கள் சந்தித்த புகைப்படத்தை பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் வெளியிட்டது. உலக வர்த்தக சமப (WTO) 3/6
• WTOவின் முதல் பெண் மற்றும் முதல் ஆப்பிரிக்கத் தலைவர் நிகோஸி +
இவெயல்லா, இவர் நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர். *தலைமையகம் - ஜெனீவா, சுவிட்சர்லாந்து
• உறுப்பினர் நாடுகள் - 164
2015இல் உலக வெப்பமயமாதல் அளவை குறைக்க 15°C அளவிற்கு வெப்பநிலையைகுறைக்க 190 நாடுகள் உறுதியளித்தன
• 2050க்குள் நிகர பூணிய சட்டங்களை இயற்றிவிட்டன.
உமிழ்வை அடைய பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் • 2010க்கான உமிழ்வு அளவில் 2030க்குள் 45% குறைத்தால் உலகின் வெப்ப அளவில் 15°Cகுறைக்கலாம்.
• படிம எரிபொருள் பயன்பாட்டை அதிகளவில் குறைப்பதால் முன்னேறி வரும் நாடுகளின்வளர்ச்சியை இது பெருமளவில் பாதிக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
• நிகர பூஜ்ஜிய உமிழ்வு என்று ஒரு குறிப்பிட்ட ஆண்டுக்கு பிறகு காற்றில் உள்ள (உமிழ்வுக்கு சமமான) பசுமை இல்ல வாயுக்களை எடுப்பதாகும்.
ரூ.4.445 கோடியில் 7 மெகா ஜவுளிப் பூங்காக்கள்
• மத்திய அரசின் 'பிம்-மித்ரா' திட்டத்தின் கீழ் ரூ 4445 கோடியில் 7 மெகா ஜவுனிப் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. * மத்திய ஜவுளித் துறை அமைச்சகம் கடந்த இந்த அறிவிக்கையை வெளியிட்டது. ஒவ்வொருஜவுளிப் பூங்காவிலும் ஒரு வட்சம் நேரடி வேலைவாய்ப்புகள் மற்றும் 2 லட்சம் மறைமுக
வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நேக்கத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
• 2021-22 மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் மத்திய அரசின் ஒப்புதலுடன் இந்த 7 ஜவுளிப் பூங்காக்களை அமைப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆயத்த ஆடை உற்பத்திக்குத் தேவையான நூற்பு ஆலை, நொவு, சாய ஆலை, பிரின்டிங் என அனைத்தும் ஒரே இடத்தில் அமையும் வாய்ப்பை இந்த பூங்காக்கள் ஏற்படுத்தித் தரும். இந்த பூங்காக்களில் உலகத்தரத்திலான உள்கட்டமைப்புகள் வசதிகள் இடம்பெறுபோது, உள்நாட்டு முதலீடுகள் மட்டுமின்றி வெளிநாட்டு நேரடி முதலீடும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்.
*இந்தப் பூங்காவை தொடங்குவதற்காக, ஜவுளித் துறை சார்ந்த வசதிகளுடன்
கூடிதொடர்ச்சியாக அமையப்பெற்றிருக்கும் 1000 ஏக்கருக்கும் அதிகமான எந்த வித வில்லங்கமும் இல்லாத இடவசதியை தயார் நிலையில் பெற்றிருக்கும் மாநிலங்களிடமிருந்து பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. இந்த ஜவுளி பூங்காவை அமைக்கும் மாநிலத்துக்கு மத்திய அரசின் மேம்பாட்டு மூலதன ஆதரவாக மொத்த திட்டச் செலவில் 30 சதவீதம் அளிக்கப்படும் அதோடு, இந்தப் பூங்காக்களில் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் விரைந்து.ஆரம்பிக்கப்படுவதை ஊக்குவிக்கும் வகையில் 'போட்டித்தன்மை ஊக்குவிப்பு ஆதரவு
(சிஐஎஸ்) நிதியாக பி.எம். மித்ரா ஜவுளி பூங்காக்களுக்கு தலா ரூ.300 கோடி வழங்கப்படும். * இந்தத் திட்டம் அதிக முதலீடுகளை ஈர்க்கும் வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தரும். என்பதோடு, அதிசு அளவில்
• தமிழகம், பஞ்சாப், ஒடிஸா, ஆந்திரம், குஜராத், ராஜஸ்தான், அஸ்ஸாம், கர்நாடகம், மத்திய பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்கள் ஆர்வம் தெரிவித்துள்ளன என்று அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3-ஆவது தவணைக்கு வேறு தடுப்பூசி: அனுமதி
* அமெரிக்காவில் ஏற்கெனவே இரு தவணை கரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்கள், 3-ஆவது ஊக்கத் தவணையாக வேறு நிறுவனத்தின் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என்று அந்த நாட்டு நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சிடிசி) அனுமதி வழங்கியுள்ளது.
• முன்னதாக ஃபைஸர் தடுப்பூசிகளை இருமுறை செலுத்திக் கொண்டவர்கள் மட்டும்தான் ஊக்கத்தவணை தடுப்பூசி பெறலாம் என்று கூறியிருந்தது. தற்போது எந்தகரோனா தடுப்பூசியையும் 3-ஆவதாக செலுத்திக் கொள்ளலாம் என்று சிடிசி தெரிவித்துள்ளதால் லட்சக்கணக்கானவர்களுக்கு ஊக்கத்தவணை தடுப்பூசிபெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
தமிழ்நாடு
உள்கட்டமைப்புத் திட்டங்களை கண்காணிக்க தனி இணையதளம்
* உள்கட்டமைப்புத் திட்டங்களைக் கண்காணித்து வளர்ச்சிகளை ஆய்வு செய்வதற்கென உருவாக்கப்பட்டுள்ள தனி இணையதளத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், தொடக்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
* தமிழகத்தில் ரூ,1 லட்சம் கோடிக்கான 200 முக்கிய உள்சுட்டமைப்புத்திட்டங்கள் தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் மூலமாக கண்காணிக்சுப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டங்களின் வளர்ச்சிகளை ஆய்வு செய்து அவற்றை தொடர்ந்து கண்காணிக்க முன்னேற்றம்’ என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்னாளுமை முகமையால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தில், ஒவ்வொரு திட்டம் குறித்த விவரங்களும் இடம்பெற்றுள்ளன.
மேம்படுத்தப்பட்ட கணினி விசைப் பலகைக்கு கீழடி பெயர் * தமிழக அரசின் மேம்படுத்தப்பட்ட கணினி விசைப்பலகைக்கு கீழடி எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட புதிய வசதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. தமிழ் இணையக் கல்விக் கழகத்தால் ஏற்கெனவே கணினி விசைப் பலகை, தமிழிணையம்-ஒருங்குறி மாற்றி ஆகிய இரு தமிழ் மென்பொருள்கள் பயன்பாட்டில் உள்ளன. இவை பல புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதற்கு கீழடி
தமிழிணைய விசைப்பலகை மற்றும் தமிழி-தமிழிணைய ஒருங்குறி மாற்றி எனப்பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கீழ்டி-விசைப் பலகை மென்பொருளானது. தமிழ் 199 விசைப்பலகை, ஒலிபெயர்ப்பு விசைப்பலகை, பழைய தட்டச்சு விசைப் பலகை ஆகிய மூன்று விதமான கணினி விசைப் பலகைகளின் அமைப்பில் செயல்படும். * தமிழிணைய ஒருங்குறி மாற்றி மென்பொருளானது, பிற தமிழ் எழுத்துருக்களில் தட்டச்சு செய்யப்பட்டவைகளை தமிழ் ஒருங்குறிக்கு மாற்றும் தன்மை கொண்டது. தமிழ் இணையக்கல்விக் கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ள மென்பொருள்களை கட்டணம் ஏதுமின்றி தமிழ்
இணையக் கல்விக் கழக இணையதளத்தில் (www.tamilvu.org) இருந்து பதிவிறக்கம்செய்யலாம். மேம்படுத்தப்பட்ட புதிய வசதிகளை தலைமைச் செயலகத்தில் நடைவெற்றநிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாவின் தொடக்கி வைத்தார்.