நடப்பு நிகழ்வுகள் அக் 22

சமீபத்திய வரலாற்று நிகழ்வு * இந்தியாவின் முதல் நடமாடும் நூலகம் மன்னார்குடி அருகே உள்ள மேலவாசலில் அக்டோபர் 21, 1931 ஆம் அண்டு திரு S.R.ரங்கநாதன் அவர்களால் தொடங்கப்பட்டது
.புவியியல் 
 புவியியல் நிலப்பகுதிகள் அல்லியம் நெஜியானம்
 * 2019 ஆம் ஆண்டில் உத்தரகாண்டில் கண்டறியப்பட்ட ஒரு தாவரமானது அல்லியம் இனத்தின் புதிய சிற்றினமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

 * அல்லியம் நெஜியானம் என்பது வெங்காயத்தின் புதிய இனமாகும்.

 * இது உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் உள்ள நிதி பள்ளத்தாக்கில்அமைந்த மலரி கிராமத்தில் இந்திய திபெத்திய எல்லைப் பகுதியில் கண்டறியப்பட்டது.

 * இது இந்தியாவின் மேற்கு இமாலயப் பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது.

  தினசரி தேசிய நிகழ்வு
 
100 கோடி தடுப்பூசிகள்: இந்தியா சாதனை
 * நாடு முழுவதும் 100 கோடி தடுப்பூசி தவணைகளை செலுத்தி இந்தியா சாதனை • படைத்துள்ளது. சுமார் மாதங்களில் இந்தச் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

 * இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கின. ஒவ்வொரு பிரிவினருக்கும் படிப்படியாக செலுத்தப்பட்டு வந்த தடுப்பூசி, தற்போது 18 வயதைக் கடந்த அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது. கோவிஷீல்ட் கோவேக்ஸின், ஸ்புட்னிக்-வி ஆகிய மூன்று வகை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. 

* இந்நிலையில், நாட்டில் செலுத்தப்பட்ட சுரோனா தடுப்பூசி தவணைகளின் எண்ணிக்கை 100 கோடியைக் கடந்தது. இதில் முதல் தவணையை 71 கோடி பேரும், இரண்டு தவணைகளையும் 29 கோடி பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர். இதன்மூலம் இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட 93 கோடி மக்கள்தொகையில் 75 சதவீதம் பேர் குறைந்தது ஒரு தவணை தடுப்பூசியும், 31 சதவீதம் பேர் இருதவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

 • பருவநிலை மாற்ற உச்சி மாநாடு (CoP-26}-2021 

* இங்கிலாந்தின் கிளாஸ்கோவில் நடைபெறும் பருவகால உச்சி மாநாட்டில் அக்டோபர் 31 • அன்று பிரதமர் மோடி இம்மாநாட்டில் கலந்து கொள்கிறார். பிரதமர் மோடி அவர்கள் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இணைந்து 'One World, • One Solar One grid' திட்டத்தை இம்மாநாட்டில் துவக்கவுள்ளனர்.

 * 100க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த தலைவர்கள் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர். 
 பருவநிலை மாற்ற உச்சி மாநாடு (CoP

 * முதல் மாநாடு பெர்லின், ஜெர்மனி (1995) காலநிலை மாற்றம் குறித்த ஐச் 2/4 கட்டமைப்பால் (UNFCCC) உருவாக்கப்பட்டது. UNFCCC 197 உறுப்பு நாடுகளை கொண்டது.

 * தலைமையிடம் - பான், ஜெர்மனி • தலைவர் - பாட்ரிக்கா எஸ்பினோசா. சர்வதேச நிகழ்வு உலக சுகாதார அமைப்பு பாராட்டு * உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், OO கோடி தடுப்பூசி தவணைகளைச் செலுத்தி, கரோனா தொற்றால் பாதிக்கப்படுவதில் இருந்து மக்களைக் காட்பாற்றியதற்காக பிரதமர் மோடி, விஞ்ஞானிகள், சுகாதாரப் பணியாளர்கள், இந்திய மக்கள் ஆகியோருக்கு பாராட்டுகள்' என்று குறிப்பிட்டுள்ளார்
. • பூடான் பிரதமர் லோதேஷெரிங், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபட்ச உள்ளிட்ட பலரும் இந்தியாவின் மகத்தான சாதனைக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஐளம்எஃபிலிருந்து விலகுகிறார் கீதா கோபிநாத் • சர்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) முதல் பெண் தலைமை ஆலோசகரான, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதா கோபிநாத் அந்தப் பொறுப்பிலிருந்து விலகுகிறார். ஐஎம்எஃப் தலைமை ஆலோசகர் பொறுப்பிலிருந்து கீதா கோபிநாத் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் விலகுவதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது. 49 வயதாகும் அவர், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவில் மீண்டும் இணையவுள்ளார்.

 * கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கீதா கோபிநாத் சர்வதேச நிதியத்தில் பணியாற்றி வருகிறார். அதற்கு முன்னதாக, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அவர் பேராசிரியராக இருந்தார். சர்வதேச நாணய நிதியம் (IMF) தலைமையிடம் - வாஷிங்டன் • தொடக்கம் - 1944 தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கென தனித்த கொள்கை: 

2 இடங்களில் ஹெலிகாப்டர் சுற்றுலா 

* தமிழகத்தில் சுற்றுலா வளர்ச்சிக்கென தனித்த கொள்கை வெளியிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், ஹெலிகாப்டர் சுற்றுலாவை ஏற்படுத்துவதற்கான நிலங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. •

 ஹெலிகாப்டர் சுற்றுலா

முக்கிய சுற்றுலாத் தலங்களை இணைக்கும் விதமாக கொடைக்கானல், ராமேசுவரம் ஆகிய இடங்களில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்கப்பட உள்ளன. இதற்காக ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்க ராமேசுவரத்தில் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கொடைக்கானவில் ஆய்வுப் பணிகள் நடைபெறவுள்ளன. அணைக்கட்டு பகுதிகளில் படகு சவாரி, உணவகம் போன்றவற்றை ஏற்படுத்த திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் மாதத்தில் 1.74 லட்சம் அமைப்பு சார்ந்த வேலைவாய்ப்புகள் தமிழ்நாட்டில்உருவாக்கப்பட்டுள்ளன • ஊழியர் வருங்கால நிதி அமைப்பு (EPFO) வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜுலை மாதத்தை ஒப்பிடும்போது ஆகஸ்ட் மாதத்தில் 6.1% வேலைவாய்ப்புகள் உயர்ந்துள்ளன. 

 * EPFO திட்டத்தில் அதிக அளவில் ஊழியர்கள் இணைவதில் தமிழ்நாடு தொடர்ந்து முதல் மூன்று இடங்களில் இடம் பெற்றுள்ளது. கடலூர், காஞ்சிபுரம், கரூர், சிவகாசி: மாநகராட்சிகளாக தரம் உயர்கின்றன அவசரச் சட்டம்பிறப்பிப்பு * கடலூர், காஞ்சிபுரம், கரூர், சிவகாசி ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான அவசரச்சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 20-ஆக உயர்கிறது

. * தமிழகத்தில் மொத்தம் 15 மாநகராட்சிகள் உள்ளன. கும்பகோணத்தை மாநகராட்சியாகதரம் உயர்த்துவதற்கு பரிந்துரைகள் ஏற்கப்பட்டு அதற்கான உத்தரவு அரசால் அண்மையில் பிறப்பிக்கப்பட்டது. இதனால் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 16-ஆக உயர்ந்தது. • நான்கு நகராட்சிகள்: தற்போது நகராட்சிகளாக உள்ள கடலூர், காஞ்சீபுரம், கரூர், சிவகாசி ஆகியவற்றையும் மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்துவதற்கான பணிகளை மாநில அரசுதொடங்கியது. இதற்கான பரிந்துரைகள் நகராட்சி தனி அதிகாரிகள் மூலமாக நகராட்சி நிர்வாகத் துறைக்கு வரப்பெற்றது. இந்தப் பரிந்துரைகள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தப் பரிந்துரைகளை ஏற்று கடலூர், காஞ்சிபுரம், கரூர், சிவகாசி ஆகிய நான்கு நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான அவசர சட்டத்தை, தமிழக சட்டத் துறை செயலாளர் (சட்டம்) சி.கோபி ரவிகுமார், பிறப்பித்தார். இதையடுத்து, நான்கு நகராட்சிகளும் மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான உத்தரவு அரசிதழில் வெளியிடப்படும். இந்த உத்தரவு அரசிதழில் வெளியிடப்படும். அவசர சட்டம் 

 * மாநில ஆளுநர் அவசர சட்டம் இயற்றும் அதிகாரம் இந்திய அரசியலமைப்பின் விதி எண் 213 இல் வரையறுக்கப்பட்டுள்ளது. 3 இடங்களில் மூத்த குடிமக்களுக்கு உறைவிடங்கள் 

 * தமிழகத்தில் பழநி, திருநெல்வேலி, சென்னை ஆகிய மூன்று இடங்களில் மூத்த குடிமக்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய உண்டு, உறைவிடங்கள் தொடங்க திட்ட வரைபடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தெரிவித்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!