வரலாறு
பாதுகாப்பு தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம்
*இந்திய விமானப்படை வீரர்களுடன் சந்திப்பு.
* இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, கிரீஸ், இஸ்ரேல் ஆகிய 8 நாடுகளின் விமானப் படைகள் பங்கேற்கும் 'புளூஃப்ளாக்' (நீலக் கொடி) கூட்டுப் பயிற்சி ஜெருசலேம் நகரில் நடைபெற்று வருகிறது. அதில் இந்திய விமானப் படையைச் சேர்ந்த 85 வீரர் கள் பங்கேற்றுள்ளனர். அவர்களை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார்.
மிராஜ் 2000' போர் விமானங்கள் உள்ளிட்டவையும் இந்தியா சார்பில் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றுள்ளன. இக்கூட்டுப் பயிற்சி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
கலாச்சாரம் அகழாய்வில் கண்டறியப்பட்ட உறை கிணற்றில் மீன் சின்னம்
கீழடியில் நடைபெற்ற17-ஆம்கட்ட அகழாய்வில்அடுக்குகள்கொண்ட
கைவேலைப்பாடுகளால் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட சுடுமண் உறை கிணறு கண்டறியப்பட்டது.
* 7-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவடைந்தது.
• கீழடியில் அகழாய்வு நடைபெற்ற, குழிகளை வழக்கம்போல் மூடிவிடாமல் அனைத்துநாள்களிலும் சுற்றுலாப் பயணிகள் பார்க்கும் வகையில் திறந்த நிலையில் பாதுகாக்கப்படும். அகழாய்வுக் குழிகள் திறந்து வைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். அகழாய்வில் கிடைத்த கட்டுமானங்களை பார்வைக்கு வைத்து பாதுகாப்பது தொடர்பான தொழில்நுட்ப வசதிகளுக்காக, சென்னை ஐ.ஐ.டி.யின் உதவியை நாட முடிவு செய்துள்ளோம். கீழடியில் 8 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் மேற்கொள்வது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. * 7 -ஆம் கட்ட அகழாய்வின் போது பஞ்சு மார்க் நாணயம் கிடைத்துள்ளது. இது கங்கைச் சமவெளியோடு பண்டையத் தமிழர்களின் வாணிபத் தொடர்பை வெளிப்படுத்துவதாகஅமைந்துள்ளது.