நடப்பு நிகழ்வுகள்-19 அக்டோபர் 21

 வரலாறு


பாதுகாப்பு தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம்


இந்திய கடற்படைக்கு போயிங் 11-ஆவது பி-81 விமானம்


• அமெரிக்க விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங்கிடமிருந்து 11-ஆவது பி-81 நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு போர் விமானத்தை இந்திய கடற்படைபெற்றுக்கொண்டது.


* கடந்த 2009-ஆம் ஆண்டு போயிங் நிறுவனத்திடம் இருந்து 8 பி-81 விமானங்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டது. அந்த விமானங்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மேலும் 4 பி-81 விமானங்களை வாங்க 2016 ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி மூன்றாவது பி-81 விமானம் இந்திய கடற்படையிடம் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

விளையாட்டு


நோரி, பதோசா முதல் முறை சாம்பியன் * அமெரிக்காவில் நடைபெற்ற பிஎன்பி பாரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இங்கிலாந்தின் கேமரூன் நோரி, மகளிர் ஒற்றையர் பிரிவில்


ஸ்பெயினின் பௌலா பதோசா ஆகியோர் சாம்பியன் ஆகினர்.


• இப்போட்டியில் இவர்கள் இருவரும் சாம்பியன் ஆனது இது முதல் முறையாகும். அதேபோல் அவர்கள் இதுவரை வென்ற பட்டங்களிலே இதுதான் மிகப்பெரியது.


பொருளாதாரம்


புதிய பொருளாதார கொள்கை மற்றும் அரசுத்துறை


4ஜி பதிவிறக்க வேகத்தில் ஜியோ முதலிடம்


* ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில் 4ஜி சேவையில் 20.9 எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. * கடந்த செப்டம்பரில் ஜியோ நிறுவனத்தின் 4ஜி சேவையின் பதிவிறக்க வேகம் 20.9 எம்பிபிஎஸ்-ஆக இருந்தது.


இந்திய தொழில் கூட்டமைப்பு (CI) தமிழக அரசுடன் இணைந்து 2030-க்குள் தமிழக பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலர்களாக உயர்த்த உதவும் * CI-ஐ சேர்ந்த உயர் அதிகாரிகள் கடந்த திங்களன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அவர்களை சந்தித்தனர். 

* Tier-4 மற்றும் Tier-II நகரங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், நெடுஞ்சாலைகள் அமைக்கும் தமிழக அரசின் திட்டங்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

PDF  வடிவில்

முழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்


Read Also :-
Labels : #DAILY CURRENT AFFAIRS ,#Group 2 ,
Getting Info...

Post a Comment