TNPSC தேர்வாணையம் ஆனது ஒவ்வொரு ஆண்டும் நடைபெற வேண்டிய தேர்வுகளை முன்னதாகவே தோராயமான அட்டவணையாக வெளியிடுவது வழக்கம்.
ஆனால் 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு கொரோனா தாக்கத்தின் காரணமாக TNPSC சார்பில் எந்த விதமான தேர்வுகளும் நடத்தப்படவில்லை ஒருங்கிணைந்த குடிமைப்பணி தேர்வுக்கான குரூப்-1 தேர்வு மட்டுமே நடத்தப்பட்டது.
தற்போது தமிழகத்தில் கொரோனா தாக்கம் முற்றிலுமாக குறைந்து வரும் சூழ்நிலையில் பல்வேறு தேர்வுகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளது.
இதனால் டிஎன்பிசி தேர்வாணயம் ஆனது 2022 ஆம் ஆண்டிற்கான நிரப்பப்பட வேண்டிய காலிப் பணியிடங்களுக்கான தேர்வுகளின் உத்தேச பட்டியலை வெளியிட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் GROUP 2&2A தேர்விற்கானஅறிவிப்பாணை வெளியாக இருக்கிறது
குரூப் 2 பிரிவில் 5821 காலிப்பணியிடங்கள் உள்ளன.
குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாக உள்ளது குரூப்-4 தேர்வில் பழைய காலிப்பணியிடங்கள் 5255 மற்றும் புதிய காலிப்பணியிடங்கள் 3000 உள்ளன
2002 ஆம் ஆண்டில் TNPSC தேர்வாணையத்தின் மூலமாக 32 தேர்வு நடத்தப்பட உள்ளன என அறிவிப்பு வெளியாகியுள்ளது