தமிழ்நாடு செய்திகள்
தமிழ்நாடு தினம்;
• ஜூலை 18 ஆம் தேதியானது தமிழ்நாடு தினமாக அனுசரிக்கப்படும் என்று தி.மு.க.அரசு அறிவித்துள்ளது.
1967 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதியன்று அப்போதைய மதராஸ் மாகாணத்தின் பெயரைத் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றுவதற்காக மாநிலச் சட்ட மன்றத்தில் அப்போதைய முதலமைச்சர் C.N, அண்ணாதுரை அவர்களால் ஒரு தீர்மானம் இயற்றப்பட்டது.• மேலும் இந்த ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று 'எல்லைக் காப்பாளர்கள்" தலா 1 லட்சம் பரிசுத் தொகை வழங்கி கௌரவிக்கப்படுவர் என்றும் திரு. ஸ்டாலின் அறிவித்துள்ளார். மொழிவாரி மாநிலங்கள் உருவான போது தமிழகத்தின் எல்லையைக் காக்கும்.பணியில் தனது வாழ்நாள் முழுவதும் ஈடுபட்ட வீரர்களே எல்லை காப்பாளர்கள்ஆவர்.
• மொத்தம் 110 எல்லைக் காப்பாளர்கள் உள்ளனர்.
தேசியச் செய்திகள்
வேளாண் தொழிலாளர்களின் தற்கொலை
• தேசியக் குற்றவியல் ஆவணக் காப்பகமானது வேளாண் தொழிலாளர்கள் மத்தியில் நிலவும் தற்கொலை நிகழ்வுகள் குறித்த ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
• 2020 ஆம் ஆண்டில் தற்கொலையினால் உயிரிழந்த வேளாண் தொழிலாளர்களின் எண்ணிக்கையானது முந்தைய ஆண்டை விட 18% அதிகமாகும்,
• 2020 ஆம் ஆண்டில் மொத்தமாக வேளாண் துறையைச் தற்கொலையினால் உயிரிழந்தனர்.சேர்ந்த10,677 பேர் பிரதான் மந்திரி கிசான் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் வருவாய் உதவியின் கீழ் நிலமற்ற வேளாண் தொழிலாளர்கள், பெருந்தொற்றுக் காலத்தின்போது அதிகளவு துயரங்களை எதிர்கொண்டிருக்கலாம்.
• வேளாண் தொழிலாளர்களின் தற்கொலை எண்ணிக்கையில் 15% அதிகரிப்பு உட்பட 4006 தற்கொலைகள் என்ற ஒரு எண்ணிக்கையுடன் மகாராஷ்டிரா மாநிலம் மிக மோசமான நிலையில் உள்ளது.
• மோசமான நிலையிலுள்ள பிற மாநிலங்களாவன, கர்நாடகா 2016
ஆந்திரப் பிரதோம் (899) மற்றும் மத்தியப் பிரதேசம் (735) ஆகும்,
• கர்நாடக மாநிலத்தில் 2020 ஆம் ஆண்டில் வேளாண் தொழிலாளர்களின் தற்கொலை எண்ணிக்கையானது 43% உயர்ந்துள்ளது.
நுரையீரல் அழற்சி 13 - வது இணைவுத் தடுப்பு மருந்து
• நோய்த் தடுப்பினை வழங்கும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது, PCV (Pneumococcal 13 - Valent Conjugate Vaccine) என்ற தடுப்பு மருந்தானது அனைவருக்கும் வழங்கப் படுவது இதுவே முதல் முறை ஆகும்.
• PVC 13 நுரையீரல் அழற்சி நோயை உண்டாக்கும் 13 வகை பாக்டீரியாக்களுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கும்.
• நிமோகாக்கஸ் என்ற பாக்டீரியாவினால் ஏற்படும் நுரையீரல் அழற்சி நோயானது குழந்தைகளில் தீவிரமான நுரையீரல் அழற்சி நோயினை ஏற்படுத்துவதற்கான. மிகவும் பொதுவான காரணமாகும்.
• இந்தியா மற்றும் உலக அளவில் நிகழும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பிற்கு நுரையீரல் அழற்சி நோயே முதன்மைக் காரணமாக உள்ளது. இந்தியாவில் 16% குழந்தைகளின் உயிரிழப்பிற்கு நுரையீரல் அழற்சி நோய் காரணமாக உள்ளது.
உலக நன்மதிப்புத் தரவரிசை 2021
• இந்தியாவின் 4 கல்வி நிறுவனங்கள் டைம்ஸ் உயர்கல்வி இதழ் வெளியிடும் உலக நன்மதிப்புத் தரவரிசையில் (2021) இடம்பெற்றுள்ளன.
• டைம்ஸ் உயர்கல்வி இதழின் இந்த வருடாந்திரத் தரவரிசையானது உலகம் முழுவதும் உள்ள முன்னணிக் கல்வி நிறுவனங்களுடைய வாக்குகளின் அடிப்படையில் 200 முன்னணிப் பல்கலைக் கழங்களைப் பட்டியலிடுகிறது.
• பெங்களூருவின் இந்திய அறிவியல் கல்வி நிறுவனமானது இந்தியக் கல்வி நிறுவனங்களின் முதன்மையான முதல் 100 இடங்களில்(91/700) இடம் பெற்றுள்ளது, மற்ற 3 இந்தியக் கல்வி நிறுவனங்களாவன: மும்பையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், டெல்லியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் மற்றும் சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் ஆகியன.
• அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகமானது 2021 ஆம் ஆண்டிற்கான தர வரிசையில் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் மற்றும் ஐக்கிய ராஜ்ஜியத்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆகியவை முறையே 2வது மற்றும் 3வது இடங்களைப் பெற்றுள்ளன .
பொருளாதாரச் செய்திகள்
அடமானம் இல்லாத சிறுகடன்கள்
• இந்திய ரிசர்வ் வங்கியானது, சிறுகடன் வங்கிகளுக்கு மட்டுமல்லாத அனைத்து கடன் வழங்கு நிறுவனங்களுக்கும் அடமானம் அல்லாத சிறு ஈடன்களை வழங்க முன் வந்து உள்ளது.
• தற்போதைய ஒழுங்குமுறைக் கட்டமைப்பானது குறைந்த வருமானமுடைய குடும்பங்களையும் கடன் பெறச் செய்தல் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்கள் கடனைத் திரும்பப் பெறும் சமயத்தில் மேற்கொள்ளும் சில கடுமையான நடைமுறைகளிலிருந்து கடனாளிகளைப் பாதுகாத்தல் போன்ற ஒரு நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டது.
• இந்த ஒழுங்குமுறை நடவடிக்கையானது வங்கிசாரா கடன் நிறுவனங்களுக்கு - சிறு கடன் வங்கிக்கு மட்டுமே பொருந்தும்.
இந்தியாவில் ஒரு லட்சத்திற்குக் குறைவான கடன்கள் சிறுகடன்களாகக் கருதப் படுகின்றன.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் செய்திகள்
புவி காந்தப் புயல்
• அமெரிக்க விண்வெளி சார்ந்த வானிலை முன்னறிவிப்பு மையமானது AR2887 என்ற சூரியப் புள்ளியிலிருந்து XI - ரக சூரியப் பிழம்புகள் தற்போது வெளியேறி வருவதாக உறுதிப்படுத்தி உள்ளது.
• இது சூரியனின் மையத்தில் அமைந்திருப்பதோடு அது தனது அமைவிடத்தின் அடிப்படையில் பூமியை நோக்கி அமைந்திருந்தது.
• அக்டோபர் 30 அன்று புவியைத் தாக்கிய புவி காந்தப் புயலானது சூரிய நிகழ்வுகளின் 5 படிநிலைகள் எனும் அளவீட்டில் 63 எனத் தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளது. சூரியப் புயலின் தாக்கமானது பெரும்பாலும் பெயரளவு (குறைவான) என்ற வகைப் பாதிப்பாகவே இருக்கும்.
மாநிலச் செய்திகள்
பள்ளிகளுக்கான FIFA கால்பந்து திட்டம்
• புவனேஷ்வரிலுள்ள கலிங்கா சமூக அறிவியல் கல்வி நிறுவனமானது உலகில் முதல் முறையாக பள்ளிகளுக்கான FIFIA கால்பந்து திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
• பள்ளிகளுக்கான கால்பந்து திட்டமானது PFA என்ற அமைப்பினால் நடத்தப்படும் ஓர் உலகளாவியத் திட்டமாகும்.
• இது சுமார் 700 மில்லியன் குழந்தைகளின் கல்வி, மேம்பாடு மற்றும் அதிகாரம் வழங்குதல் போன்றவற்றில் பங்களிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
• சாதி அடிப்படையிலான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு - ஆந்திரப் பிரதேசம்
• 2021 ஆம் ஆண்டிற்கான தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பினரைக் குறிப்பிடுவதற்காக ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகைக் கணக்கெடுப்பினை மேற்கொள்ளுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை ஒன்றை விடுக்க ஆந்திரப் பிரதேச அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
• சமீபத்தில் தெலங்கானா மாநில அரசும் இது போன்ற தீர்மானத்தினைத் தனது மாநிலச் சட்டமன்றத்தில் நிறைவேற்றியது.
• பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரின் நலனுக்கான ஒரு தனித் துறையை அமைக்கவும் ஆந்திரப் பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது, உயர்சாதியைச் சேர்ந்த ஏழை மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தும் நோக்கத்துடன் இத்துறையானது உருவாக்கப்பட்டது.
• நறுமணத் தோட்டம் - உத்தரகாண்ட்
• உத்தரகாண்ட் மாநிலமானது நைனிடால் மாவட்டத்தில் இந்தியாவின் மிகப்பெரிய நறுமணத் தோட்டத்தினை அமைத்துள்ளது.
• உத்தரகாண்ட் வனத்துறையின் ஆராய்ச்சிப் பிரிவானநு நைனிடால் மாவட்டத்தில் லால்குவான் பகுதியில் அமைந்த இந்தியாவின் மிகப்பெரிய நறுமணத் தோட்டத்தைத் திறந்து வைத்தது.
• இந்தத் தோட்டத்தில் இந்தியா முழுவதும் உள்ள 140
வகையான நறுமணத் தாவரங்கள் உள்ளன
பிரபலமானவர்கள், விருதுகள், மற்றும் நிகழ்வுகள்
புனித் ராஜ்குமார் (46)
• கன்னட சினிமா சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமார் மாரடைப்பால் காலமானார்.
• இவர் அப்பு என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.
• இவர் 'Who Wants to Be a Milionaire' எனும் வினாடி வினா நிகழ்ச்சியின் கன்னடப் பதிப்பான கன்னட கோடியாதிபதி என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதற்காக பிரபலமாக அறியப் பட்டார்.