TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் 03 நவம்பர் 21

TNPSC செய்திகள்
பெண்குழந்தைகள்பாதுகாப்பு முதலமைச்சரின் திட்டத்தின் கீழ்குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளும் பெண் குழந்தைகளின் பெற்றோர்களின் வயது
வரம்பினை உயர்த்தி தமிழக அரசு ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது,

அதன் படி வயது வரம்பானது 35 வயதிலிருந்து 40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
CLICK HERE FOR PDF DOWNLOAD

தமிழ்நாடு செய்திகள்

தனியாக வாழும் பெண்மணிகள் தற்போது 'குடும்பம்' எனக் கருதப்படுவர்
கணவர்கள் (அ) பெற்றோர்களைப் பிரிந்து வாழும் ஒற்றைப் பெண்மணிகள் தற்போது 'குடும்பம்' என அங்கீகரிக்கப்படுவர்

மேலும், அவர்களுக்குப் பொது வழங்கீட்டுத் துறை மூலம் குடும்ப அ ட்டைகள் வழங்கப்படும். தனியாக வாழும் பெண்கள் குடும்ப அட்டைப் பெறுவதற்கான வரைமுறைகள் 
அந்த பெண்கள் எரிவாயு (முன்னுரிமை) அல்லது சமையல் வசதியுடன் கூடிய ஒரு சமையலறையைக் கொண்டிருக்க வேண்டும்.

தனியாக வாழ்வது குறித்து எழுதப்பட்ட சுய அறிவிப்பு (ஆவணம்)
அவர்களின் வீடானது  வருவாய் ஆய்வாளரால் தணிக்கை செய்யப்படும்.

ஆதார் மற்றும் எரிவாயு கட்டண ரசீது,

(TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள்)

தேசிய செய்திகள்

MGNREGA - நிதிப் பற்றாக்குறை;
21 மாநிலங்களில் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் என்ற திட்டத்தின் நிதி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2021 ஆம் நிதி ஆண்டில் இத்திட்டத்திற்கான நிதி பாதியிலேயே தீர்ந்து விட்டது.
 அடுத்த பாராளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கும் வரை கூடுதல் பட்ஜெட் ஒதுக்கீடுகள் எதுவும் செய்யப் படாது,

இதில் நிதிப் பற்றாக்குறை என்பது மாநிலங்கள் தங்களது சொந்த நிதியைப் பயன்படுத்தாத வரையில் MGNREGA தொழிலாளர்களுக்காக அளிக்கப்படும். கொடுப்பனவுகள் மற்றும் செலவுகள் ஆகியவற்றில் ஏற்படும் தாமதமாகும்.

(TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள்)


இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர்

இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் மற்றும் மாலத்தீவின் தலைமை தணிக்கையாளர் ஆகியோர் பொது நிதியின் மீதான தணிக்கைச் செயல்முறைபடுத்துவதற்காக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த இரு நாடுகளுக்கும் இடையில் பொதுத் தணிக்கை பரிமாறிக் கொள்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் குறித்த தகவல்கள்
துறையின் தகவல்களைப் இந்திய அரசியலமைப்பானது பகுதி V என்பதின் கீழ் உள்ள Vவது அத்தியாயத்தில் இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் பதவியானது ஒரு தனித்தச் சுதந்திரத்தைக் கொண்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர். பதவியானது அரசியலமைப்புச் சட்டத்தில் 148 முதல் 151வது விதிகள் வரைக் கூறப்பட்டுள்ளது.

(TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள்)


 வீர் கதா திட்டம்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியமானது வீர் கதா என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கி உள்ளது.

வீர தீர விருதுகள் வென்றவர்கள் குறித்து அறிக்கைகளைத் தயார் செய்து அதன் அடிப்படையிலான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு பள்ளிகளிடம் கோரப்பட்டுள்ளது. பள்ளி மாணாக்கர்களிடையே வீர தீர விருதுகள் வென்றவர்களின் தியாகங்கள் மற்றும் துணிச்சலான செயல்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை வீர் சுதா திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது,

நீர்வாழிடங்களில் நெகிழி மாசுபாடு
"மாசுபாடு முதல் தீர்வு வரை: கடலிலுள்ள குப்பைகள் மற்றும் நெகிழி மாசுபாடு உலகளாவிய மதிப்பீடு' என்ற அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது.

Aquatic Life குறித்த இந்த அறிக்கையானது சுற்றுச்சூழலில் கடல் குப்பைகள் மற்றும் நெகிN மாசுபாடுகளின் தாக்கம் மற்றும் சூழலமைவு வனவிலங்கு மற்றும் மனிதர்களில் அவற்றின் விளைவுகள் குறிந்து வெளிப்படுத்துகிறது. *கடலிலுள்ள நெகிழிகளின் அளவானது சுமார் 75 – 199 மில்லியன் டன்கள் என இந்தஅறிக்கையில் மதிப்பிடப் பட்டுள்ளது.

சரியான நடவடிக்கை எடுக்கப் படவில்லையெனில் நீர்வாழிடங்களில் குவியும் நெகிழிக் கழிவுகளின் அளவானது 2040 ஆம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட 3 மடங்காகும் என கணிக்கப் பட்டுள்ளது.
(TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள்)



உமிழ்வு இடைவெளி அறிக்கை 2021

ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பின் 2021 ஆம் ஆண்டு உமிழ்வு
இடைவெளி அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது. இது 12வது உமிழ்வு இடைவெளி அறிக்கையாகும்.

 மற்ற நாடுகளுடனான தணிப்பு நடவடிக்கைகளுடன் சேர்ந்து தேசங்களின் புதிய பருவநிலை உறுதிப்பாடுகளானது உலக வெப்பநிலையை இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 2,7°C வரையிலான வெப்பநிலை' உயர்விற்கான பாதையில் உலகை வைக்கின்றன என்று இந்த அறிக்கை கூறுகிறது.

2020 ஆம் ஆண்டில் ஏற்பட்ட எதிர்பாராத வகையிலான 5.4% சரிவைத் தொடர்ந்து,உலகளாவிய கார்பன் டை ஆக்சைடு உமிழ்வுகளின் அளவுகள் மீண்டும் முந்தைய நிலைக்குத் திரும்பி வருகின்றன. வளிமண்டலத்திலுள்ள பசுமை இல்ல வாயுக்களின் செறிவும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

தீர்மானம் 2601

 ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையானது ஒரு தனித்துவமிக்க முதல் வகையிலான ஒரு தீர்மானத்தினை ஏற்றுக் கொண்டுள்ளது.

இது கல்வி உரிமையை உடனடியாக பாதுகாக்கவும், பள்ளிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யவும் வேண்டி ஆயுதமேந்திப் போராடும் கட்சிகளை வலியுறுத்தச் செய்வதற்கான ஒரு தீர்மானமாகும்.

15 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையானது குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிரானத் தாக்குதல்களை கண்டித்து, 2601 தீர்மானத்தினை ஒருமனதாக ஏற்றுக் கொண்டது.

இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியாவும் வாக்களித்துள்ளது

(TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள்)


இந்தியாவின் தீர்மானத்திற்கு அங்கீகாரம்

 ஐக்கிய நாடுகள் பொதுச் சபை சர்வதேச சூரியசக்திக் கூட்டிணைவிற்குப் பார்வையாளர் அந்தஸ்து வழங்குவதற்காக இந்தியாவினால் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு வரைவு தீர்மானமானது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வரைவு தீர்மானமானது பொதுச் சபையின் 6வது குழுவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76வது கூட்டத் தொடரானது இனி 5வது குழுவின் பரிந்துரையை முறையாக ஏற்க வேண்டும்.

(TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள்)


சுற்றுச்சூழல் செய்திகள்

ஆர்க்டிக் டெர்ன்ஸ் (வடமுனை ஆலா குருவி)

ஆர்க்டிக் பகுதியிலிருந்து மன்னார் வளைகுடா கடல்சார் உயிர்க்கோளக் காப்பத்திற்கு வரும் ஆர்க்டிக் டெர்ன்ஸ் உள்ளிட்ட பறவைகளின் வருடாந்திர இடம்பெயர்வானது தொடங்கியுள்ளது.

இந்தப் பருவகால இடம் பெயரவானது மத்திய ஆசியாவின் வான்வழிப் பாதையில் நிகழ்கிறது.

 ஆர்க்டிக் டெரின்ஸ் பறவைகளானது கோண வடிவ (கூர்முனை) இறக்கைகள்:
கொண்டுள்ள மற்றும் நீர்நிலையை விரும்புகின்ற பறவைகளாகும்.

இவை நீண்ட தூர வருடாந்திர இடம்பெயர்விற்காக நன்கு அறியப்படுகின்றன. இவை ஒவ்வொரு ஆண்டும் 70,000 கி.மீ நூரம் பயணித்து ஒரு நுருவம் முதல் மற்றொரு துருவம் வரை இடம்பெயர்ந்து செல்கின்றன

உலகிலுள்ளப் பவளப்பாறைகளின் நிலை : 

2020 அறிக்கைஇந்த அறிக்கையானது கட்டமைப்பினால் தயாரிக்கப் பட்டது.
உலகளாவியப் பவளப்பாறைகள் கண்காணிப்புக் இது உலகிலுள்ள பவளப்பாறைகளில் அளவிடப்பட்ட வெப்பநிலை உயர்வு பற்றிய அறிவியல் தகவல்களை வழங்குகிறது.

2019 ஆம் ஆண்டு முதல் உலகின் 14% பவளப்பாறைகள் அழிந்து விட்டதாக இந்த அறிக்கை கூறுகிறது.

விளையாட்டுச் செய்திகள்

74வது மூத்த தேசிய நீர்நிலை சாம்பியன்சிப் போட்டிகள்

74வது மூத்த தேசிய நீர்நிலை சாம்பியன்சிப் போட்டிகளில் கர்நாடகா ஒட்டு மொத்த வெற்றியைப் பெற்றுள்ளது.

ஸ்ரீஹரி மற்றும் ரிதிமா ஆகியோர் 200 மீ பேக்ஸ்ட்ரோக பந்தயத்தில் வெற்றி பெற்றனர்.

ஷோன் கங்குலி 400 மீ மெட்லி போட்டியில் வெற்றி பெற்றார்.

100 மீ பட்டர்ஃப்ளை போட்டியில் (53,24) சஜன் பிரகாஷ் ஒரு புதிய சாதனை படைத்துள்ளார்.

(TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள்)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!