TNPSC செய்திகள்
முதலாவது ஜன்ஜாதிய கௌரவ் இவாஸ் அல்லது பழங்குடியின கௌரவ இனத்தன்று பகவான் பிர்சா முண்டா நினைவு மற்றும் சுதந்திரப் போராட்ட நினைவு அருங்காட்சியகத்தை ஜார்க்கண்டின் ராஞ்சியில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
ஜன்ஜாதிய கௌரவ் திவாஸ் நவம்பர் 15 அன்று அனுசரிக்கப்படுகிறது; கலாச்சாரம் சார்ந்த சொத்துக்களை சட்டவிரோதமாக கடத்துவதற்கு எதிரான
சர்வதேச இனமானது ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 14 அன்று அனுசரிக்கப்படுகிறது.
ஒவ்வோர் நாட்டிலும் திருட்டு குறையாடுதல் மற்றும் கலாச்சாரம் சார்ந்த சொத்துக்களை சட்டவிரோதமாக கடத்துதல், மக்களின் கலாச்சாரம் அடையாளங்கள் மற்றும் வரலாற்றைச் குறையாடுதல் போன்றவை நிகழ்வதால் இந்தக் குற்றங்களை எதிர்த்துப் போரிட நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். என்பதை இத்தினமானது உலகிற்கு நினைவூட்டுகிறது.
மாணவர்கள் பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் அளிப்பதற்கு 14417 என்ற உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் தனியார் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து விளக்கமளிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
தமிழ்நாடு செய்திகள்
V.திருப்புகழ்
சென்னை நகர்ப்புறப் பகுதியில் வெள்ள அபாயத்தைத் தணித்தல் மற்றும் மேலாண்மை தொடர்பான ஆலோசனைக் குழுவைத் தலைமையேற்று நடத்தச் செய்வதற்காக ஓய்வு பெற்ற இந்திய குடிமைப்பணி அதிகாரி V.திருப்புகழ் என்பவரை தி.மு.க அரசு நியமித்துள்ளது.
இவர் குஜராத் மாநிலத்தில் முதலமைச்சர் நரேந்திர மோடியின் கீழும், பிரதமரான பிறகு தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்திலும் பணி புரிந்துள்ளார்; திருப்புகழ் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணி புரிந்த போது 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னை மற்றும் காஞ்சிபுரம் வந்த ஒரு குழுவிற்குத்தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு வெள்ளங்கள் - கற்றப் பாடங்களும் & சிறந்த நடைமுறைகளும் என்ற ஒரு தலைப்பில் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் இவரது குழு மேற்கொண்ட கண்டுபிடிப்புகள் இடம் பெற்றன.
ஒவ்வொரு மாநில அரசு ஊழியர்களுக்கும் மின்னஞ்சல் முகவரி
. தமிழக மாநில அரசானது மாநில அரசு ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப் பட்ட மின்னஞ்சல் முகவரியானது வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முன்னதாக அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பினைச் செயல்படுத்துவதற்காக தமிழசு மாநில அரசு, அதற்குரிய ஒரு
அரசாணையை வெளியிட்டுள்ளது.
இந்த அரசாணையின்படி, தமிழக அரசின் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்குள் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியானது வழங்கப்படும்.
தேசியச் செய்திகள்
சாத்விக் சான்றிதழ்
இந்திய இரயில்வே சமையல் மற்றும் சுற்றுலாக் கழகமானது இந்திய சாத்விக் சபையுடன் இணைந்து 'சைவ இரயில்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்த இரயில்கள் குறிப்பாக மத வழிபாட்டுத் தலங்களுடன் இணைக்கப்படும்.
'சாத்விக் சான்றிதழானது" இந்திய சாத்விக் சபையினால் வழங்கப்படுகிறது.
தற்போது, புதுடெல்லி முதல் காத்ரா வரையில் இந்திய இரயில்வே சமையல் மற்றும் சுற்றுலாக் கழகமானது 'வந்தே பாரத் இரயிலை இயக்கி வருகிறது. இந்த இரயிலுக்கு 'சாத்விக் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
வந்தே பாரத் மட்டுமின்றி, 18 இதர இரயில்களுக்கும் இந்திய சாத்விக் சபை சான்றிதழ் அளிக்க உள்ளது.
TVS மோட்டார் நிறுவனம்
TVS மோட்டார் நிறுவனமானது ஐக்கிய நாடுகளின் உலகளாவிய ஒப்பந்தத்தில் இணைந்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் உலகளாவிய ஒப்பந்தமானது உலகின் மிகப்பெரிய தன்னார்வ பெரு நிறுவன சுற்றுக்குழல் நிலைத்தன்மை முன்னெடுப்பாகும். TVS மோட்டார் நிறுவனமானது இந்த ஒப்பந்தத்தில் இணைந்த முதலாவது இந்திய இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தி நிறுவனமாகும். TVS மோட்டார் நிறுவனமானது ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு இலக்குகளை, குறிப்பாக நிலையான சுற்றுச்குழல் மேம்பாட்டு இலக்குகளை மேம்படுத்தும் கூட்டுத் திட்டங்களிலும் ஈடுபட உள்ளது.
உலகின் முதலாவது வணிகப் பங்குதாரர் திட்டம்
பாரத்பே நிறுவனமானது தனது வணிகப் பங்குதாரர்களுக்காக உலகின் முதலாவது வணிகப் பங்குதாரத் திட்டத்தினைத் தொடங்கியது
இது 100 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒரு திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் பாரத்பே நிறுவனம், தனது வணிக வாடிக்கையாளர்கள் அதன்
பங்குதாரர் ஆவதற்குமான வாய்ப்பினையும் வழங்குகிறது. இந்த நிறுவனமானது 2024 ஆம் ஆண்டுக்குள் பொதுப் பட்டியலை வெளியிடத் திட்டமிட்டு 1 பில்லியன் டாலர் மதிப்பில் பொதுப் பட்டியலையும் இலக்காக நிர்ணயித்துள்ளது.
பதவி நீட்டிப்பிற்கான புதிய அவசரச் சட்டங்கள்
இந்தியாவின் மத்திய அரசானது அமலாக்க இயக்குநரகம் மற்றும் மத்தியப் புலனாய்வு அமைப்பு ஆகியவற்றின் இயக்குநர்களுடைய பதவிக் காலத்தை 5 ஆண்டுகள் வரை நீட்டிப்பதற்கான இரண்டு அவசரச் சட்டங்களை வெளியிட்டது.
தற்போது அமலாக்க இயக்குநரகம் மற்றும் மத்தியப் புலனாய்வு அமைப்புகளின் இயக்குநர்கள் 2003 ஆம் ஆண்டு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையச் சட்டத்தினால் 2 ஆண்டுக் காலத்திற்கு நியமிக்கப்படுகின்றனர்.
அமலாக்க இயக்குநரகம் மற்றும் மத்தியப் புலனாய்வு அமைப்புகளின் இயக்குநர்களை முதலில் 2 ஆண்டுக் காலத்திற்கு நியமிக்கலாம்
எனினும் தேவைப்பட்டால் அவர்களின் பதவிக் காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம்.
3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதற்கு வேண்டி ஒவ்வொரு வருடமும் தனித்தனி நீட்டிப்பு
உத்தரவுகள் அளிக்க வேண்டும். எனினும் அமலாக்க இயக்குநரகம் மற்றும் மத்தியப் புலனாய்வு அமைப்பின் இயக்குநர்களின் தனது 5 ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்த பிறகு எந்தவொரு பதவி நீட்டிப்பும் வழங்கப் படக் கூடாது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் செய்திகள்
கமோஓலேவா
கமோஒலேவா எனும் குறுங்கோளானது புவியினைப் போன்று உள்ள ஒரு பகுதியளவு துணைக் கோளாகும். இது ஹவாயிலுள்ள ParSTARRS என்ற தொலைநோக்கியின் மூலம் 2006 ஆம் ஆண்டில்
கண்டறியப்பட்ட, புவியின் ஒரு பழைய துணைக்கோளாகும்.
பூமிக்கு அருகிலுள்ள விண்பொருளாக கருதப்படும் இது பூமியிலிருந்து சுமார் 9
மில்லியன் மைல்களுக்கு அருகில் சூரியனைச் சுற்றி வருகிறது. இதற்குத் தானே பயணிக்கும் ஒரு சந்ததியைக் குறிக்கக் கூடிய மற்றும் ஹவாய் மந்திரத்தின் ஒரு பகுதியுமான வார்த்தையைக் கொண்டு கமோஓலேவா என்று பெயரிடப் பட்டது.
மாநிலச் செய்திகள்
கைசர்-இ-ஹிந்த்
கைசர்-இ-ஹிந்த் என்பது மிகப்பெரிய மற்றும் பிரகாசமிக்க வண்ணமயமான ஒரு -வண்ணத்துப் பூச்சியாகும். இது தன் பெயரில் 'இந்தியா' என்பதைக் கொண்ட கைக்குப் பிடிபடாத சிறிய வாலுடைய ஒரு வண்ணத்துப் பூச்சியாகும்.
இது சீனாவிலும் காணப்படுகின்றது.
இது தற்போது அருணாச்சலப் பிரதேசத்தின் மாநில வண்ணத்துப் பூச்சியாக அறிவிக்கப் பட்டுள்ளது.
வங்கலா திருவிழா
மேகாலய மாநிலமானது அதன் 44வது வங்கலா திருவிழாவைக் கொண்டாடியது.
இது 100 பறைகளின் ஒரு திருவிழாவாகும். இது காரோ பழங்குடி மக்களின் அறுவடைக்குப் பிந்தைய ஒரு திருவிழாவாகும்.
இது காரோ இன மக்களின் சூரியக் கடவுளான 'சல்ஜோங்கி என்ற கடவுளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகின்றது.
இது அறுவடைப் பருவத்தின் முடிவையும் குறிக்கிறது. 1976 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படும் இந்தத் திருவிழாவானது காரோ பழங்குடியினரின் (Gato tribe) மிக முக்கியத் திருவிழாவாகும்.
விளையாட்டுச் செய்திகள்
T20 உலகக் கோப்பை வெற்றிப்பட்டம்
ஆஸ்திரேலிய அணியானது தனது முதலாவது 120 உலகக் கோப்பைப் பட்டத்தை வென்றது.
இந்த அணி இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது. ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் உமார்ஷ் (Mitchel Marsh) போட்டியின் ஆட்ட நாயகனாகவும் டேவிட் வார்னர் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
முக்கிய தினங்கள்
உலக நீரிழிவு நோய் தினம் - நவம்பர் 14
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கவனிப்பதில் செவிலியர்கள் வகிக்கும் முக்கியப் பங்கு குறித்த விழிப்பணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 2021-23 : நீரிழிவுச் சிகிச்சைகளை அணுகச் செய்தல் - இப்போது இல்லையெனில் எப்போது?" என்பதாகும்.
இது 1922 ஆம் ஆண்டில் சார்லஸ் ஹெர்பர்ட் என்பவருடன் சேர்ந்து இன்சுலின் என்ற ஹார்மோனைக் கண்டுபிடித்த சர் பிரடெரிக் பாண்டிங் என்பவரின் பிறந்த
தினத்தைக் குறிக்கின்றது. இந்த ஆண்டு இன்சுலின் ஹார்மோன் கண்டுபிடிக்கப்பட்டதன் 100வது ஆண்டு நிறைவை அனுசரிக்கின்றது.
குழந்தைகள் தினம் - நவம்பர் 14
இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளைக்
குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் இத்தினமானது கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் குழந்தைகள் தினமானது 'பால் திலாஸ்' என அறியப்படுகிறது.
இத்தினமானது குழந்தைகளின்
உரிமைகள்,நலன் மற்றும் கல்வி குறித்த
விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்துடன் கொண்டாடப்படுகிறது.
1964 ஆம் ஆண்டில், நேரு அவர்களுக்கு கௌரவமளிக்கும் விதமாகவும் குழந்தைகள் மீது அவருக்கு இருந்த அன்பை நினைவுபடுத்தும் விதமாகவும் குழந்தைகள் தினமானது நவம்பர் 14 அன்று கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நியாவில், ஆரம்பத்தில் குழந்தைகள் தினமானது உலகளாவிய குழந்தைகள்
தினமான நவம்பர் 20 (1955) அன்று அனுசரிக்கப்பட்டது.